பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 9 வழங்கும் பஞ்சாபியர், தலைநிமிர்ந்து நிற்பதில் வியப்பேது தம்பி? தமிழ்நாட்டு நன்கொடை ஒரு கோடியைத்தானே எட்டுகிறது என்ற சிறு ஏக்கம் என்னுள் எழுந்தது. நாமும் அவர்களைவிட அதிக மாக-நன்கொடையளித்து, தலைநிமிர்ந்து நிற்கும் அந்த நாளும் வந்திடாதோ என்று எண்ணினேன். பரிமாறுபவர், இரு பில்'களோடு எங்கள் முன் தோன்றினர். இரு பில் களையும் எடுக்க நான் முயன்றேன். அதிலும் விரைவாக அவர் முயன்ருர். இந்தி மொழியில் ஏதோ கூறினர். பரிமாறுப்வர் அவர் பக்கம் நெருங்கிவிட்டார். நான் தோற்று விட்டேன். பில்'கள் கேப்டன் கைக்குள் சிக்கின். f இது சரியன்று, இருவருக்கும் நானே பணம் கொடுக்க விடுங்கள் என்றேன். 'நீங்கள் வந்திருப்பது எங்கள் பகுதிக்கு. இங்கு நீங்களே விருந்தாளி. ஆகவே நான் கொடுப் பதே முறை. நான் சென்ன்ைக்கு வரும்போது உங்களைத் தேடிவந்து விருந்துண்கிறேன்' என்ருர் அவர். இதற்குள் சேரவேண்டிய பணமும் போய்ச் சேர்ந்துவிட்டது. முடிந்த விவகாரம் என்பதை உணர்ந்தேன். அவரது விருந்தோம்பலுக்கு நன்றி கூறினேன். இருவருமாகப் பேருந்து வண்டிக்குத் திரும்பினேம். விருந்தோம்பல் மனிதப் பண்பு, தனிக்கூட்டப் பண்பல்ல. இதை நினைவுறுத்தவே, பொய்யா மொழியார், பொதுமறையில் விருந்தோம்பலைச் சேர்த்தார் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்து தெளிந்தேன். பின்னர் சந்திகர்ர் நகரிலும் மூன்று நாள்கள், பாஞ்சாபியரின் விருந்தோம்பற் சிறப்பை நேரில் உணர்ந்து மகிழ்ந்தேன்.