பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பேருந்து வண்டி கர்னலை விட்டுக் கிளம் பிற்று. காப்பிக்கடை நெருக்கத்தால் கேப்டனேடு அளவளாவினேன். உங்கள் பேருந்து வண்டிகள் எவ்வளவு விரைந்து செல்லுகின்றன’’ என்றேன். ஆம்! அதோ! நெடுஞ்சாலையைப் பாருங்கள். எவ்வளவு தூரத்திற்கு, நேராகக் கோணலின்றிச் செல்கிறது பார்த்தீர்களா?' என்று சாலையின் நேரான அமைப்பைச் சுட்டிக்காட்டினர். "மெய்தான். இத்தனை கிலோமீட்டர்களும் ஒரே நேராகச் செல்லும் சாலைகள் பல நம் நாட்டில் இல்லை. இந் நேர்சாலை உங்கள் இயல்பு போல் இருக்கிறதே. நீங்கள் நேருக்கு நேர் செல்பவர்கள், செய்பவர்கள்; நிற்பவர்கள், வளைந்து நுழைந்து, பதுங்குபவர்கள் அல்ல என்பதை உலகறியும்’ என்று பஞ்சாபியரைப் பாராட்டினேன். அவர் பதில் சொல்லவில்லை. அவரது குறுநகை பதில் கூறிற்று. ஒப்புதலைக் காட்டிற்று. 'இதோ பாருங்கள்; விரைவைத் தடுக்கும் எருமை ஒன்று இந் நேர்வழியிலே, நெடுஞ்சாலை லே’ என்று பஸ்ஸை நிறுத்தும் எருமையைச் சுட்டிக்காட்டினர். 'இதற்குள், பலமுறை இப்படிப்பட்ட கால் நடைகள் குறுக்கிட்டுள்ளன; இல்லையென்ருல் இன்னும் நெடுந்துாரம் சென்றிருக்கும் இவ்வண்டி’ என்று அங்கலாய்த்தேன் நான். 'உண்மை. இதோ குறுக்கே நிற்கிறது எருமை. இது வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை. விளையாட்டிற்காகவும் இப்படிச் செய்யவில்லை. எருமையின் போக்கு இது. எதையும் பொருட்