பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 படுத்தாது, மெல்ல நகர்வது-எங்கும் மெல்ல நகர்வது-எப்போதும் மெல்ல நடப்பது- எருமை யின் இயல்பு. காலம் மாறுகிறது; எருமையின் இவ்வியல்போ மாறுவதில்லை; பல்லக்குக் காலத்துப் போக்கே, பேருந்து வண்டிக் காலத்தும் அதனிடம் உள்ளது. இது தொலையட்டும். ஆறறிவு பெற்ற மக்களிலே எத்தனையோ பேர்-பட்டத்தின் மேல் பட்டம் பெற்ற எத்தனையோ பேர்-கால மாற்றத்தை உணர்ாது, அதற்கேற்ற போக்கு மாற்றத்தை உணராது ஊருக்குத் தொல்லையாக, சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாக, நாட்டு வளர்ச்சிக் குக் குறுக்கே நிற்கும் எருமைகளாக நிற்கின்றனர்! இதை நினைத்தால் வேதனையாக இல்லையா? குறுக்கிடும் எருமையை ஒதுக்கி, வளைந்து சென்று விரைவது போல், பத்தாம்பசலிகளை ஒதுக்கிவிட்டு, வளைந்து சென்று, புதிய பாரத சமுதாயங் காண விரைவோமாக’ என்ருர் அவ்வீரர். இமைப்பொழுது நின்று, மறு இமைப்பொழுது ஒதுங்கி, மூன்ரும் இமைப்பொழுது மீண்டும் விரைந்தது பேருந்து வண்டி. திண்ணைப் பேச்சுக் களுக்குச் செவிசாய்க்காது, குறிக்கோள் தெளி வோடு, வழிதெரிந்து நடத்தும் தலைவனைப் போல, சந்திகாரை நோக்கி, சாலைவழி ஒட்டினர் எங்கள் சாரதி. கண்டு, கேட்கும் பொறுப்பை ஏற்ருேம் நாங்கள். சாலை நெடுக, கண்ணுக்கு எட்டிய மட்டும் பசுமை காட்சியளித்தது தம்பீ! உயர்ந்து வளர்ந் துள்ள கரும்புத் தோட்டம் இதோ. தங்காய்! வெள்ளைவெளேரென்று பெரும்பூ பூத்து நிற்கும் காலிபிளவர் தோட்டம் அதோ. பொன்னிறக் கதிர்கள் தாங்கி நிற்கும் வயல்கள் அடுத்தடுத்து. பலவகையான பயிர் வகைகள் ஆங்காங்கே.