பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வயல்களிலே உழுவோர் ஒருபால். மேடு களிலே கதிரடிப்போர் பெண்கள் மறுபால். இவ்விதம் நிலவளத்தின், மக்கள் சுறுசுறுப்பின், அவர்தம் வஞ்சமற்ற உழைப்பின் பலன்களெல்லாம் நெற்குவியல்களாக, காலிபிளவர் லாரி'களாக, கரும்பு வண்டிகளாக எங்களை வரவேற்றன. நல்ல விளைவு. ஒன்று போட்டால் ஒன்பதாக விளைகிறதே. நிலவளத்தோடு, நீர் வளமும் மிகுதியோ? என்று வினவினேன் அன்பரை. பாஞ்சாலத்தில் நீருக்குக் குறைவேது? ஐந்து புனலாறு கொண்டதல்லவா இவ் வளநாடு’. அவை எட்டாத பல பகுதிகளில் குழாய்க் கிணறுகள் (Tube wells) உள்ளன. சாதாரணக் கிணறுகளும் ஏராளம். எங்கள் வீரம்போல் அவற்றில் நீரும் சுரக்கும். அவற்றைக் கொண்டு பயிரை வளர்ப்பர் இம் மக்கள். அதோ பாருங்கள். ஒர் ஒட்டையைக் கட்டி நீர் இறைக்கிருர்கள். செக்குமாடு சுற்றுவதுபோல், இவ்வொட்டை சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. அவ்வியக்கம், தகரத் தவலைகளில் கிணற்று நீரைக் கொண்டுவந்து மேலே பாய்ச்சுகிறது. ஒட்டையைக் கட்டி நீர் இறைக்கும் முறை இன்றும் பல இடங் களில் உண்டு. மின்சார இறைப்புமுறை வேக மாகப் பரவி வருகிறது. இப்படி, தொன்றுதொட்டு வரும் உழவுத் தொழிலிலும் முன்னேறுகிறது எங்கள் பகுதி. அதோ வலப்பக்கம் திரும்புங்கள். சாலைக் கப்பால் இருநூறு அடி தூரத்திலுள்ள வயலைப் பாருங்கள். டிராக்டர் உழவு தெரிகிறதா? இயந்திர உழவு முறை, இன்றைய பாஞ்சாலத்தின் நாகரிக மாகி வருகிறது.