பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி சிறந்த தமிழ்நாடு என்னருமைத் தம்பி, தங்காய்! பாஞ்சால நெடுஞ்சாலையின் நீண்ட நேர்மை யையும், நில, நீர்வளங்கள், மக்களின் உழைப்போடு -விஞ்ஞான அடிப்படை உழைப்போடு-சேர்ந்து உணவுப் பொருள்களை விளைவித்துக் குவிப்பதையும் கண்டு, காட்டினேன். உங்களுக்கு. மக்களது மன வளத்தையும் காட்டினேன். அவர்களது உள்ள உரத்தை உணர்வதற்குமுன், பயிர் உரத்தைப் பற்றிப் பேச்சுத் திரும்பிற்று. உரவகையிலும் நவீனம் உண்டோ என்று நான் கேட்டதையும் உங்களுக்குத் தெரிவித்தேன். பதிலும், உரையாட லின் தொடர்பும் இதோ. ஆகா! அப்படியே! எங்கள் பக்கம், இரசாயன உரத்தை அறியாதவர் அறியாதவரே! பக்ரா-நங்கல் அணைகளைப் பார்க்கச் சென்ருல், நங்கலில் உள்ள உரச்சாலையைக் காணத் தவருதீர்கள். அங்கு அன்ருடம் உற்பத்தி செய்யப்படும் உரத்திலே பெரும்பகுதி இப் பக்கத்திலேயே செலவாகிவிடு கிறது என்ருர் அவர். 'செயற்கை உரம் நிரம்பக் கிடைப்பதாலா, இயற்கை உரமான மாட்டுச் சாணத்தையெல்லாம் வரட்டி தட்டி எரித்து விடுகிருர்கள்?’ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினேன் நான். சாணத்தை வரட்டியாக்குவது பெருந்தீங்கு; கணக்கிடமுடியாத இழப்பு. வயல்களுக்குத் தேவைப் படாமல் தேங்கிக்கிட்ப்பதால் அல்ல இத் தீங்கு நடப்பது. நெடுங்காலம் வந்த பழக்கக் கொடுமை யால் இத் தவறு நடக்கிறது. வழிநெடுக, ஊர் தோறும் வரட்டி உலர்த்தியிருப்பதையும், குவித்து இருப்பதையும் பார்த்துக் கொண்டல்லவா வருகிறீர்