பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கள்? சாணம் முழுவதையும் வரட்டியாக்கிடவில்லை. எருவாகவும் பயன்படுத்துகிருர்கள். வரட்டி தட்டு வதை நிறுத்திச் சாணம் முழுவதையும் எருவுக்கே பயன்படுத்தினல் நம் விளைச்சல் எவ்வளவோ அதிகரிக்கும். இதைப் பஞ்சாபியர் மட்டுமல்ல, இந்தியர் அனைவருமே உணரவேண்டும்' என்ருர் Jøls/T 'உண்மை. உணரவேண்டியதே. உணர்த்தின லன்ருே உணர்வார்கள்? எழுத்தறிவில்லாத மக்கள் நம் மக்கள். பண்டையப் பழக்கம் என்கிற உளைச் சேற்றிலே சிக்கியவர்கள் நம்மவர்கள். அதிலிருந்து கரையேற முடியாதவர்கள் இவர்கள். இவர்களுக்கு நல்லதை உணர்த்த ஒரு கூட்டம் தேவை. புதியதை உணர்த்த, அடுத்தடுத்து உணர்த்த தொண்டர்கள் தேவை. நல்லதை, புதியதை உணர்ந்தவர்களைக் கை கொடுத்துக் கரையேற்றிவிட, தொண்டர் பெருங் கூட்டம் இருந்தால் இவர்களும் திருந்துவார்கள். உரப் பொருள், எரிபொருளாகப் பாழாவது நிற்கும். வயல்கள் வளம் பெறும். பயிர்கள் செழிப்புறும். விளைச்சல் மலையென உயரும்’ என்று குட்டியுரை ஆற்றினேன். மெய்யே! கதரை எடுத்துக் கொள்வோம். நாட்டுப் பொருள்கள்மேல் வெறி கொண்ட ஒரு கூட்டம். தொண்டர் கூட்டம், தனக்கென்ன கிடைக்கும் என்று கணக்குப் பாராத நற்ருெண்டர் கூட்டம், ஊர் ஊராகச் சுமந்து சென்று, திண்ணை திண்ணையாக இறக்கி வைத்து விற்றதால் அல்லவா, பட்டிதொட்டியெல்லாம், உரிமை உடையாக கதர் பரவிற்று? சம்பள உயர்வும், வேலை உறுதியும், விடுமுறை உரிமைகளும் பற்றியே கவலும் சம்பளக் காரர்கள் அன்று கதரைப் பரப்பியிருக்க முடியுமா? புதிய, நல்லதை விளக்கி, விதைத்துப் பரப்ப தொண்