பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டர்கள் தேவை. நிலைத்த அமைப்புகளை, முறைகளை உள்ளது உள்ளபடி நடத்தவோ அலுவலர்கள் போதும் என்ருர். - இதற்குள், அம்பாலா நகர் வந்தடைந்தோம். பேருந்து வ்ண்டி, நிலையத்தில் நின்றது. மக்கள் நடமாட்டம் அங்கும் இங்கும். அவர்கள் நடை யிலே சுறுசுறுப்பு இருந்தது. படபடப்பு இல்லை. 'அண்மையில் நடந்த போரில், பாகிஸ்தானியர், இவ்வூரில் குண்டு போட்டார்கள் அல்லவா’ என்று கேட்டேன். ஆம், கிறித்தவக் கோயிலின்மேல், பாகிஸ் தானியர்குண்டு வீழ்ந்தது இவ்வூரில்தான்' என்ருர். அப்படியா? போரைப் பற்றிய கிலி யாரிடமும் கானேமே!’ என்று வியந்தேன். 'உண்மை. இதோ பாருங்கள். தெருவோரக் கடைகளை ; அவற்றிலே மொய்த்துள்ள மக்கள் கூட்டத்தை அவர்களின் கலகலப்பான சிரிப்பை . இப்போது போர் நின்றிருப்பதாகப் பெயர். போர் நடந்தபோதுகூட-கிறித்தவக் கோயில் மேல் குண்டு வீழ்ந்த பிறகும்கூட-மக்கள் அலறித் துடித்து ஒடவில்லை. அல்லற்பட்டு அலையவில்லை. என்.தயும் தாங்கும் இதயத்தோடு வாழ்ந்தனர். எப்பக்கம் வந்து புகுந்துவிடும் : பாகிஸ்தான் எத்தனை பட்டாளம் கொண்டுவரும்’ என்று உறுதியோடு இருந்தனர் அமைதியாக,_ஒழுங்காக நட்ந்து கொண்டனர் பொதுமக்கள். இவ்வூரிலும் சரி, பிறவூர்களிலும் சரி, வகுப்புக் கலவரம் ஏது மின்றி, எல்லோரும் இந்தியர் என்று இணைந்து நின் றனர். வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து ஒரு மைப்பாட்டை உணர்த்தினர் உலகிற்கு அப்போது