பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 W நாடு முழுவதிலும் சுடர்விட்டு எரிந்த ஒருமைப் பாட்டுணர்ச்சி நம்மையெல்லாம் பரவசப்படுத்து கிறது என்று உணர்ச்சி பொங்க உரைத்தார். நெருக்கடியில் முளைத்த பரவலான ஒருமைப் பாட்டுணர்ச்சி, சில வாரங்களாக வளர்ந்து வரும் அவ்வுணர்ச்சி வேரூன்றி, தழைத்துக் கிளைத்து, விழுதுான்றி விட்டால் குறையேது நமக்கு. அமைதி தவழும் அம்பாலாவைவிட்டுப் புறப் பட்டோம். வயல்கள்மேல் திளைத்திருந்த கண்கள், வளத்தைக் கண்டுகளித்த கண்கள், வரட்டிகளைக் கண்டு வாடின கண்கள், மக்கள்மேல் வீழ்ந்தன. பஞ்சாபியர் உயரமானவர். ஆண்கள் மட்டு மல்ல, பெண்களும் உயர்ந்து வளர்ந்தவர்களே. அப் பகுதியில், கத்திரிக்காய்க்குக் காலும் கையும் வைத்தது போன்ற குட்டை மக்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற கட்டான உடலும் உடையவர்கள். ஆண்டுக்கு ஒரு முறை மாறிமாறி கடும் வெப்பத்தையும், கடுங்குளிரையும் தாங்கித் தாங்கி உரம் பெற்றது அவர்களது உடல். மக்களின் உடையைப் பார்த்தேன். கந்தல் உடையினர் பலர்; அழுக்கு உடையினரும் பலர். வளம் மிக்க பாஞ்சாலத்திலும், தொழில் மிக்க பாஞ்சாலத்திலும் இவர் பலர் என்றறிந்து வாடி னேன். வறுமைக் கொடுமை. அது சமூகக் கொடுமை. அது தானுக விலகாது. அதைக் களை வது சமூகத்தின் கடமை. உழுது விதைத்து அறுப்பார்க்கு உணவில்லை, நெய்து குவித்துக் கொடுப்பார்க்கு உடையில்லை’ என்ற நிலை நன்னிலையா? அல்லவென்ருல், தாளுக நீங்கும் நிலையா? நீக்கப்பட வேண்டிய நிலையா? யாரோ நீக்கவேண்டிய நிலையா? நீங்களும் நானும்