பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சேர்ந்து நீக்கவேண்டிய நிலையா? சிந்தியுங்கள் தம்பிகளே! தங்கைகளே! குறிக்கோள் தூய்மை யோடு கூடிநின்று, பாடுபட்டு நீக்கவேண்டிய நிலை யல்லவா அது? வினைத் திட்பத்தோடு நீக்கவேண் டிய நிலையல்லவா அது காலங்கருதி இடத்தாற் செய்து நீக்கவேண்டிய நிலை அது. இப்போக்கிலே அழுந்தியது சிந்தன. நேரம் ஒடிற்று, ஊரும் வந்தது. சந்திகார் பேருந்து வண்டி லையஞ் சேர்ந்தோம். வண்டித்துணை அன்பருக்கு நன்றி கூறினேன். சென்னை வந்தால் காணவேண்டி னேன். வாடகைக் கார் ஏறினேன். சட்டமன்ற உறுப்பினர் புது விடுதிக்கு விரைந்தேன். பாஞ்சாலக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் அங்குக் காத்திருந் தனர். நெடுநாள் நண்பர்கள்போல் வரவேற்று உபசரித்தனர். சுந்தரவடிவேலு என்ற என் பெயரை சுந்தர துவேதி என்று மாற்றி விட்டனர். இத் திரிபைப் பார்த்துத் திகைத்தேன். மொழியியல் வல்லார் கூறும் சொல்லாராய்ச்சி சில வேளை வலிந்துரை போலத் தோன்றுவதுண்டு. இத்தகைய பெரிய திரிபிற்குப் பின், அவர்கள் உரையிலும் உண்மை புதைந்து கிடப்பதுபோல் தோன்றிற்று. . மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவின் பிற்பகல் கூட்டத்திற்குச் சென்றேன். அறிஞர் பலர் பேசினர். நெடுநாட்களாகத் தொடர்ந்துவரும் கல்வி நோய் களைப் பற்றிக் கருத்துரை வழங்கினர். சிக்கல்களைச் சுட்டிக் காட்டினர். மாற்று மருந்துகளைக் கூறினர். சிக்கவிழ்க்கும்_முறைகளை விளக்கினர். அவற்றின் விவரத்தைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். மீண்டும் அவற்றைக்கூறி உங்கள் பொன்னை காலத்தை விளுக்கேன். ஆனல் ஒன்றை மட்டும் எடுத்துரைப்பேன்.