பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 பணமுடை, வழிவழி வந்தது: கல்வி என்றதும், முன்னே வந்து நிற்பது. பணமுடையைக் காட்டி, கல்வியைக் கட்டுப்படுத்தியது அன்னியர் காலம். எழுத்தறிவுகூட எல்லோருக்கும் எட்டாதபடி விட்டுச் சென்றது ஆங்கில ஆட்சி. - தன்ட்ைசி இந்தியா, குடியாட்சி இந்தியா, வெள்ளத்தின் பெருக்கைப்போல் கல்வி பெருக வேண்டுமென்று முடிவுசெய்துள்ளது. அதை நடை முறைக்குக் கொண்டுவர முயல்கிறது. இடை யிலே தடைகள் பலப்பல. எதை எதையோ காட்டி, அடிப்படைக் கல்வியைக்கூட, ஒடுக்க நினைக்கும் அறிஞர்கள் இன்றும் உண்டு. அவர்கள் குரலுக்கும் இடமுண்டு. சந்திகாரிலும் இருந்தது. என்றுமுள்ள பணமுடை, நாட்டின் நெருக்கடி நிலைமையில்ை மிகுந்துள்ளது. எனவே தொடக்க நிலைப்பள்ளிகளைக்கூடப் புதிதாகத் திறக்க வேண்டா. உள்ள பள்ளிகளுக்குத் தாமே வரும் பிள்ளைகள் வரையில் தரமான கல்வி கொடுத்தாற் போதும்’ என்று சந்திகார் கூட்டத்தில் இரண்டொரு குரல்கள் கேட்டன. ஆனல் அவை செல்லவில்லை. ஏன்? அமைதியாக, அழுத்தமாக, திருத்தமாக, தெளிவாக, இனிமையாக, மெல்லிய குரலில் பதில் வந்தது ஒடுக்கவாதிகளுக்கு. என்ன பதில் அது? நாம் இருப்பது குடியாட்சியில்; எனவே குடிகள் விருப்பத்திற்கே முதல் இடம். குறைந்த கல்வியை-அதிக அளவு கல்வியை அல்ல-அவர்கள் கேட்கும்போது அதையும் மறுக்க யாருக்கு உரிமை யுண்டு? தட்டிக் கழிக்கத்தான் உரிமையேது? பள்ளிப் படிப்புத் தேவையைத் தள்ளிப்போட முடியாது. ’’ இதுவே அந்த பதில்.சரியான பதில் அல்லவா? எ. வா-4