பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ‘சரிதான். அப்படியேசெய்து விடலாமென்று டைரக்டரிடம் சொல்லுங்கள். இது முதல் அமைச்சர் நேரிடையாக இட்ட முதல் ஆணை. முதல் தரமான ஆணையும்கூட அல்லவா? அதைக் கேட்டதும் விழித்துக் கொண்டேன். இயக்குனர் கட்டளை நினைவிற்கு வந்தது. 'தங்கள் விருப்பம் எதுவோ, அப்படி உத்தர விடுவதாக இயக்குனர் சொல்லியனுப்பினர். வேண்டுமானல் மேல் வகுப்புகளுக்கும் அனுமதி கொடுக்கலாம்: என்று பணிவோடு சொன்னேன். வேண்டாம், வேண்டாம். உங்கள் நிபந் தனைகள் சரியாக இருக்கின்றனவே. எனக்கு வேண்டி யவர்களே நியாய்த்திற்குக் கட்டுபடாவிட்டால், மற்றவர்களை எப்படி நான் கட்டுப்படுத்த முடி யும்? முதல் மூன்று படிவங்களைக் கொடுப்பது போதும். அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் சொல்லியனுப்புகிறேன்’ என்ருர் காமராசர். அவரிடம் விடைபெற்றுகொண்டு திரும் பினேன். அலுவலகத்திற்கு வந்து, இயக்குனரிடம் நடந்ததைக் கூறினேன். அவர் ஒன்றும் கூறவில்லை. புன்முறுவலோடு முடித்துவிட்டார். இரண்டு நாள்கள் கழிந்தன. குறுப்பிட்ட பள்ளிக்கூடத்தை நடத்த அனுமதி கோரியவர் அலுவலகம் வந்தார். “உயர்நிலைப்பள்ளிகூடம் பற்றி கனம் முதல் அமைச்சர் அவர்களைக் கண்டோம். எங்களிடம் உள்ள குறைகளை எடுத்துச் சொன்னர், இப்போ துள்ள வசதிகளுக்கு, எடுத்த எடுப்பிலேயேமேல் வகுப்புகளைக் கேட்பது சரியல்ல என்பதை உணர் கிருேம். முதல் மூன்று படிவங்களுக்கு அனுமதி கொடுங்கள். வசதிகளைப் பெருக்கிக் கொண்டு