பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருந்த நாற்காலிகளுள் ஒன்றில் உட்கார்ந்து இருந்தார். என்ன? இப்படி இருங்கள்' என்று கலகலப் போடு, நெடுநாள் பழகியவரைப்போல் கூறினர் முதல் அமைச்சர். கர்மவீரர் காமராசரை அது வரை நான் எட்டியிருந்து பார்த்தவன். எனக்கு அவரோடு முன்பின் பழக்கமில்லை. - அன்றே முதல் முறை, அவரை நேருக்குநேர் கண்டேன். ஆயினும் சட்டென்று பற்றும் கலகலப்பை அவரிடம் கண் டேன். நாற்காலியில் அமர்ந்தேன். உயர்நிலைப் பள்ளிக்கூடம் வைக்க, அனுமதி கொடுக்க என்னென்ன நிபந்தனைகள்? இது கனம் காமராசரின் கேள்வி. நிபந்தனைகளைக் கூறினேன். நியாயமாகவே உள்ளன என்ருர் இனிமையாக. 'இன்ன உயர்நிலைப்பள்ளியைக் கேட்கும் இவர்கள் இத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்று வார்களா அல்லது எதற்காவது விதிவிலக்குக் கேட் கிருர்களா? என்று கேட்டார் முதலமைச்சர். இக் கேள்வியை எதிர்பார்த்தேன், பதில் சொல்ல் ஆயத்தமாகச் சென்றிருந்தேன். எனவே பளிச்சென்று பதில் கூறினேன். அவர்கள் உடனடியாக நிறைவேற்றக் கூடாத நிபந்தனைகள் இரண்டொன்று இருந்தன. அவற்றைக் கூறினேன் முதல் அமைச்சரிடம். 'இப்படிப்பட்ட நிலையில், உங்கள் இலாகா என்ன முடிவு செய்யும்?' என்று வினவினர். எனது இயக்குனர் சொல்லி அனுப்பிய அறி வுரையை மறந்துவிட்டு, முதல் மூன்று படிவங்களே மட்டுமே அனுமதிக்கும். என்றேன்.