பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஆயும் காலம் அது. பல ஊர்த் தலைவர்கள் படை யெடுக்கும் காலம் அது. அப்போது நான் துணை இயக்குனர்.உயர்நிலைக்கல்விக்குத் துண்ை இயக்குனர். ஒரு நாள், பதினொரு மணிக்கு, அப்போதைய கல்வி இயக்குனர் என்னை அழைத்தார். “முதல் அமைச்சர், இன்ன உயர்நிலைப் பள்ளிக் கூட ம்னுவைப் பற்றிப் பேசவேண்டுமாம். இன்று பிற்பகல் மூன்று மணிக்கு அவரைக் கண்டுவா. அவரது ஆணையைப் பெற்றுவா. அவரைக் காணக் கோட்டைக்குச் செல்லும்போது, எல்லா பேப்பர் களையும் எடுத்துக்கொண்டு செல்' என்று கட்டளை இட்டார். அப் பள்ளிக்கூட மனுவையும், அதோடு இணைந்தவைகளையும் அலுவலகத்திலிருந்து பெற் றேன். அவைகளை நன்ருகப் படித்துப் பார்த்தேன். மீண்டும் இயக்குனரிடம் சென்றேன். அம் மனுவைப் பற்றிய முழு நிலையையும் விளக்கினேன். முதல் அமைச்சரோடு பேசும்போது, இது பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று வினவினேன். புன் முறுவல் பூத்தார். இம் முதல் அமைச்சர், நம் துறைபற்றிய விவ காரமொன்றில், இப்போதே முதன் முறையாக நேரில் பேசுகிருர். ஆகவே விழிப்பாயிரு. அப் பள்ளியைக் கொடுக்க முடியுமென்ருே, கொடுக்கக் கூடாதென்ருே சொல்லாதே. அவரோடு விவாதிக் காதே. அவர் எதைச் செய்யச் சொன்னலும் சரி யென்று சொல்லிவிட்டு வா. இதுவே இயக்குனர் இட்ட கட்டளை. குறித்த நேரத்தில், முதல் அமைச்சரின் பேட்டி கிடைத்தது. அவரது அறைக்குள் மெல்ல நுழைந் தேன். பதவி நாற்காலியில் இல்லை அவர். அடுத்