பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அன்று, வகுப்பிற்குள் நுழைந்ததும் என்னைப் பார்த்துவிட்டார். சில நாள்கள் வராதிருந்து அன்று வந்ததைக் கவனித்தார். இத்தனை நாள்களாக ஏன் பள்ளிக்கு வரவில்லையென்று இனிமையாக கடுமையாக அல்ல-வினவினர். பதில் கூறத் தயங்கி னேன். அப்போதும் கோபப்படவில்லை. க்ண்ணுலும் கோபிக்கவில்லை. 'எவ்வளவு கிடைப்பதானுலும், வால்பிடிக்கும் வேலைமட்டும் வேண்டாம் வடிவேல்' என்று புன் முறுவலோடு புகன்ருர். அதிலே குத்தல் இல்லை; கிண்டல் இல்லை; பரிவு இருந்தது; கனிவு இருந்தது: ஆதரவு இருந்தது. ஆகவே, அதைச் சிக்கெனப் பிடித்தது என் சிந்தை. கனக்கு ஆசிரியர் கணக் கோடு நிற்கட்டுமே. மற்றதில் ஏன் தலையிடு கிருர்?’ என்ற எதிர்போக்கு எழவில்லை என்னி டம். அந் நல்லுரை, என் இளம் உள்ளத்திலே பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. வால் பிடிக்கும் இயல்பு அன்ருேடு முறிந்துவிட்டது. வால் பிடிக்கும் சபலம் மின்னும்போதெல்லாம் கணக்கு ஐயாவின் நெடிய, இனிய தோற்றமும் மின்னுகிறது; அவரது இன்மொழி, நன்மொழி அன்றுபோல் வலிமை குன்ருமல் நெஞ்சில் ஒலித்துத் தடுக்கிறது. தம்பீ! ஆண்டுகள் ஒடினலும் எனக்கு ஒலி குறையாத மற்ருெரு உரையைக் கூறட்டுமா ? என்னை நெறிப்படுத்தின-நெறிப்படுத்துகிற-அவ் வுரையையும் கேள் தங்காய். 1954 ஆம் ஆண்டு மே திங்கள் கல்விக் கூடங் களுக்கு கோடை விடுமுறை. கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கோ இறக்கை கட்டிப் பறக்கும் காலம், அடுத்த கல்வி ஆண்டில் எங்கெங்கே உயர்நிலைப் பள்ளிகளை வைப்பதென்று. மனுக்களை