பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 நாட்கள் சென்றன. வாரங்களும் கழிந்தன. இரண்டொரு திங்களும் மறைந்தன. அவர்-கனம் காமராசர்-மேற்கூறிய மனுபற்றி ஒன்றும் சொல்ல இந் நிலையில், சென்னையில் ஒர் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. அதில் கனம் காமராசரும் நானும் பங்குகொண்டோம். அப் பள்ளியில் படித்தவர்களில் பெரும்பாலோர், அரி சனங்கள் அல்லது பிற்போக்கு வகுப்பினர் என்ற செய்தியை அறிக்கையில் கண்டதும் மகிழ்ந்தார். அம் மகிழ்ச்சியினலோ என்னவோ, அவர்களது கலை நிகழ்ச்சிகளைக் காணவும் தங்கிவிட்டார். கலைநிகழ்ச்சிகளுக்கு இடையே என்னேடு கல கலப்பாக பேசினர். அம் மனநிலையைப் பயன் படுத்திக் கொள்ள எண்ணினேன். என்னைப் பேட்டிகண்ட பெரியவரின் பெயரைக் கூறினேன். அவர் முதல் அமைச்சரிடம் கொடுத்த மனுவை மெல்ல, நினைவுபடுத்தினேன். ஆம், கொடுத்தார்’ என்ருர். "அதுபற்றி தாங்கள் என்னிடம் ஏதோ சொல்லப் போவதாகவும் அப் பெரியவர் கூறினர்' என்றேன். பதிலில்லை. புன்முறுவல் வந்தது. வீட்டிற்கு வந்து தெரிந்து கொள்ளட்டுமா?’ என்று வினயமாக வினவினேன். வேண்டாம். நீங்களும் நானும் பதவியில் இருக்கிருேம். பலரும் வருவார்கள். பார்க்கத்தான் வேண்டும். பலவும் சொல்வார்கள். கேட்க வேண்டி யதே. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் செய்ய முடியுமா? காதுகளைக் கொடுங்கள் அவர்களுக்கு. முடிவை வைத்துக் கொள்ளுங்க ள் உங்கள் அறிவிற்கு. சட்டமும், முறையும் உங்களுக்குக் தெரியும். எது நியாயமோ அப்படியே முடிவு செய்யுங்கள் . . . . . *