பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேச்சு முடியவில்லை. இதற்குள் குறுக் கிட்டேன். இல்லை யென்று இழுத்தேன். 'தவறிப்போல்ை மட்டும் என்ன? என்னிட மல்லவா வருவார்கள். அப்போதும் உங்களைக் கேட்காமலா எதுவும் செய்வேன்! சுயமாக, மன சாட்சிப்படி உத்தரவு போடுங்கள். இம்_முடிவில் உறுதியிருந்தது. அதைக் கூறின குரலில் மென்மை யும் இருந்தது. இதைப் பற்றிய பேச்சு அத்துடன் நின்றது. வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரியனுகச் செயல் இக் குறள் நினைவிற்கு வந்தது. உழைப்பால் உயர்ந்தவர். தெரிந்து வினையாட லிலும் சிறந்தவர் என்பதை உணர்ந்தேன். நெறி யிலும் உயர்ந்தவர் கனம் காமராசர் என்பதை அறிந்தேன். அவர் வைத்த நம்பிக்கையும் அவர் கொடுத்த உரிமையுமல்லவா, புல்லாம் என்னையும் வேலாக்கி வைத்தது. மலையைப் பெயர்க்கும் ஆற்றலையும் நல்லவர் நம்பிக்கை நல்கும். சுயமாக, மனசாட்சிப்படி உத்தரவு போடுங் கள். அன்று கேட்டேன் இவ்வுரிமை, உரையை. பின்னர் பல ஆண்டுகள் பறந்து விட்டன. ஆயினும் என்ன? காலத்தை வென்று இன்றும் ஒலிக்கிறது என் நெஞ்சில். கிணற்றுக்குள்ள்ே இருந்து கேட்கிற மெல்லிய ஒலியர்கவா? அல்ல, ஆல்ல. வலிமை யோடு ஒலிக்கிறதே இப்போதும். நினைவு உள்ள வரை நிலைக்கும் ஒலியன்ருே இது. -