பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வாங்கு வாழ்ந்தவர் என்னருமைத் தம்பி, தங்காய்! 'காலை வணக்கம்! இன்று நீங்கள் நலந்தான?” “பிற்பகல் வணக்கம்! இன்று நீங்கள் நலந்தான?” ‘மாலை வணக்கம்! இன்று நீங்கள் நலந்தான?” இப்படிப்பட்ட நலங்கேட்டல் நடந்த க. நாள் தோறும் நடந்தது. என்னை இப்படிக் கேட்டார் கள். எல்லோரும் கேட்டார்கள். சாப்பாட்டு விடுதி ஆள் கேட்டார். பரிமாறுபவர் கேட்டார். வாடகைக் கார் ஒட்டிகள் ேக ட் டார் க. ஸ். ஆசிரியர்கள் கேட்டார்கள். அசிரியைகள் கேட் டார்கள். நான் சந்தித்த அத்தனை அமெரிக்கரும் கேட்டனர். ஏதோ எனக்குத் தனியாகக் கிடைத்த பெருமை என்று எண்ணிவிட வேண்டா தம்பீ! அந் நாட்டவர், யாரைக் கண்டாலும் இப்படியே கேட்பர். நாளை, நீ சென்ாலும், உன்னையும் இப்படிக் கேட்பர் தங்காய். இப்படி நலங் கேட்டல் அமெரிக்க மரபு. பிற நாட்டவரைக் காணும்போதும் .ே க ட் பர்; தன்ட்ைடவரைக் காணும்போதும் கேட்பர். அமெரிக்கர்கள் கலகலப்பானவர்கள். முன்னரே அறிமுகமாகாதவர்களிடமும் மரியாதை யாக நடப்பார்கள். ஒருவாை ஒருவர் கண்டகம், நலங்கேட்டல் அவர்களது இயல்பு. முகஞ்சுளிப்பு குறைவு. 'உம்' என்று இருப்பகம் குறைவு. ஆகவே நீங்கள் அமெரிக்கா செல்கிறபோது இதை எதிர் பாருங்கள்; இதற்கு ஆயத்தமாகச் செல்லுங்கள். முன்னரே அறிமுகமாகாதவர்களோடு, எப்படிப் பேசுவது என்று விறைத்து நிற்காதீர்கள். அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி வாருங்கள்.