பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அமெரிக்கர்களின் பொது விசாரணையைப் பற்றி சொன்னேன். சிறப்பு விசாரணையைப் பற்றிச் சொல்லட்டுமா தம்பீ! o 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினேராம் நாள். நான், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலை நகரான வாஷிங்டன் நகரில் இருந்தேன். காலை உணவை முடித்துவிட்டு ஒட்டலின் வெளியே வந்து நின்றேன். வாடகைக்காருக்காகக் கைகாட்டி நின்றேன். சிறிது நேரம் சென்றது. வாடகைக் கார்கள் பல பறந்தன. கடைசியாக, காலியாகச் சென்ற கார் ஒன்று சட்டென்று நின்றது. கார் ஒட்டி, தன் இடத்தில் உட்கார்ந்தபடியே கதவைத் திறந்தார். உள்ளே உட்கார்ந்தேன். கதவை மூடினர். செல்ல வேண்டிய இடத்தைக் கூறினேன். மறுவினடி பறந்தது அவ் வண்டி. அமெரிக்க மரபுப்படி, அவ் வண்டியோட்டி என் நலனைக் கேட்டார். அதோடு நின்முரா? இல்லை. மேலும் கேட்டார். அடுத்த கேள்வி என்ன? 'எந் நாட்டிலிருந்து வருகிறீர்கள்? இது அவரது கேள்வி. 'இந்தியாவில் இருந்து வருகிறேன்' என்றேன். 'அப்படியா? என் அனுதாபம். நேருவின் மறைவு உங்களுக்குப் பேரிழப்பாகும். அமெரிக்கர் அனைவரும் அதற்காகப் பெரிதும் வருந்துகிருேம்' என்ருர். "ஆம், பிரதமர் நேரு மன்றந்தது, இந்தியா விற்குப் பேரிழப்பே. எங்கள் நேருவின் மறை விற்கு, அமெரிக்கர் அனைவரும் வருந்துவது போலவே, உங்கள் கென்னடியின் மறைவிற்கும் இந்தியர் எல்லோரும் வருந்துகிருேம் என்று ஆறுதல் பரிமாறினேன்.