பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 "இருவர் மறைவும் மெய்யாகவே பேரிடிகளாம். நேருவும், கென்னடியும் மனிதகுல மாணிக்கங்கள். இவர்கள் இருவரும் வெறும் கட்சித் தலைவர்கள் அல்ல. நாட்டுத் தலைவர்கள் மட்டுமல்ல. மானுடம் முழுமைக்கும் வாழ்ந்தவர்கள் இருவரும். மானுடத் திற்குக் குரல் கொடுத்தவர்கள் இவர்கள். உலக அமைதிக் காவலர்கள் ஆயிற்றே இருவரும். மக்கள் இனம் முழுவதையும் நேசித்த இரு பெருந்தலைவர் களே அடுத்தடுத்து இழந்து விட்டதே உலகம்' என்று உருகினர் அவர். நெஞ்சை நெகிழ வைத்த இப் பேச்சு, அவர் ஒருவரோடு நின்றதா? இல்லை. பலரும் நேருவின் மறைவிற்கு ஆறுதல் கூறினர். ஒவ்வொரு நாளும் பலரிடம் இத்தகைய ஆறுதல் கேட்டேன், நானும் அத்தனை பேருக்கும் ம்ாற்று ஆறுதல் கூறினேன். கென்னடியின் மறைவை நினைவூட்டி ஆறுதல் கூறினேன். ஆறுதல் கூறினவரும் ஆறுதல்கள் பெற்றவரும் ஒரு நிலையினரா? எளிய தொழிலா ளர்கள் மட்டுமா? இல்லை. சாதாரண பொது மக்களும் உண்டு. கற்றறிந்த மேதைகளும் உண்டு. எளியவர்களும் உண்டு. செல்வர்களும் உண்டு. இங்கே பிறந்து மறைந்த நேருவிற்கு அங்கே வாழும் மக்கள் உருகுவானேன்? நம்மோடு வாழ்ந்து மறைந்த நேருவிற்கு அமெரிக்கர் அழு வானேன்? தலைமைப் பதவியில் வீற்றிருந்த ஒருவ ருக்குத் தரையில் கிடக்கும் மக்கள் துக்கப்படு வானேன்? கோமானின் மறைவிற்காகக் கோடிக் கணக்கான குடியிருப்போர் குமுறுவானேன்? அதேபோல் அங்கே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கென்னடிக்கு இங்கேயுள்ள இந்தியர் கண்ணிர் வடிப்பானேன்? சமயத்தால் வேறுபட்ட இந்துக்களும் இரங்குவானேன்? செல்வத் தலைவனின்