பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இறப்பிற்குச் செக்குமாடாக உழைக்கும் பாட்டாளி களெல்லாம் பதைபதைப்பானேன்? இச் சிந்தனைகள் எழுந்ததுண்டா தம்பி? செல்வத்தில் பிறந்தவர்கள் நேருவும், கென்ன டியும். செல்வத்தில் வளர்ந்தவர்கள் இருவரும். செல்வச் செருக்குற்றுக் கிடந்தவர்களா இருவரும்: இல்லை, ஏழைகள்ை ஏறிட்டுப் பார்க்காதவர்களா? செல்வத்தையும், அது கொடுத்த சூழ்நிலையை யும், செல்வாக்கையும் வாய்ப்புகளாகக் கொண்ட வர்கள் இருவரும், எதற்கு வாய்ப்புகளாகக் கொண்டார்கள்? சொந்த வாழ்க்கைக் கவலையி லிருந்து பெற்ற விடுதலையை நாட்டின் தொண் டிற்கு வாய்ப்பாக மாற்றினர்கள் இருவரும். ஏழைகளைப் பற்றியே எண்ணினர்கள்; ஏங்கினர்கள்: ஏழைகளுக்காகவே பேசினர்கள் திட்டமிட்டார்கள்: உழைத்தார்கள்: காலமெல்லாம் உழைத்தார்கள்; மலைமலையாக எழுந்த எதிர்ப்பலைகளையெல்லாம் சமாளித்துக்கொண்டு அரும்பாடு பட்டார்கள். சமூக மாடியின் உச்சியிலே பிறந்த நேருவும் கென்னடியும் மேட்டுக் குடியினரைப்போல் உல்லாச வாழ்விலே மறைந்தார்களா? இல்லை. தாழ்ந்து கிடந்தவர்களை, சமூகத் தி ன் அடித்தளத்திலே அழுந்திக் கிடந்தவர்களைக் கைதுாக்கி நிறுத்தி, வாழ்ந்தவர்கள் இவர்கள். ஒரு நீதிக்காகவே உழைத்து உயிரை விட்டார்கள் இருவரும். பள்ளத் தில் கிட்ந்த சமுதாயத்தை, மேநிலைப்படுத்த போராடி மாய்ந்தவர்கள் நேருவும் கென்னடியும். தம்பி! விண்ணகத்தே உள்ள இரவி, மண்ண் கத்தே வந்து ஒளி கொடுக்கிறது. வாழ்வளிக்கிறது. சிலருக்கல்ல; சில உயிர்களுக்கல்ல; எல்லோருக்கும்: