பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 எல்லா உயிர்களுக்கும். அவ்வண்ணமே நேருவும் கென்னடியும் எவ்வளவு உயரத்தில் வீற்றிருந் தாலும், மக்கள் இனம் முழுமைக்கும் காவலாளர் களாக, வாழ்விளிப்போர்களாக, நம்பிக்கை ஊட்டு பவர்களாக விளங்கினர்கள். ஆகவே அவர்கள் மறைந்தாலும், மறக்காமல் வையத்து மக்களெல் லாம் போற்றுகிருர்கள். தொண்டர்களுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. மக்கள் தொண்ட்ர் களுக்கு மக்கள் உள்ள இடமெங்கும் சிறப்பு. இதிலே விந்தை என்ன? நம் இந்தியத் தலைவரிடம் இவ்வளவு பெருமதிப்புக் கொண்டுள்ள அமெரிக்காவைப் பார்த்த ஆவல் எழுகிறதா தம்பீ? தவறல்ல தம்பி! காலத்தில் கைக்கூடும் இதுவும். அதுவ்ரை, கருத்தாய்க் கற்றுவா. பதருமல் பாடுபடு. விழிப் பாகப் பாடுபடு. உண்மையாக வாழ்ந்துவா. போக்கு வரத்து வசதிகள் மட்டுமல்ல, போக்குவரத்து வாய்ப்புகளும் மேலும் மேலும் பெருகும் எதிர்காலம் உன்னையும் அமெரிக்காவிற்குக் கொண்டுசெல்லும். இனி அமெரிக்கா செல்வோருக்கும் வழக்கம்போல் வணக்கம் கிடைக்கும். என்றும்போல், இனியும் நலனைக் கேட்பார்கள். நேருவை நின்வூட்டி ஆறுதல் கூறலாம். அதோடு நிற்பார்கள்ா! அடுத் தடுத்து ஆறுதலுக்குரியவர்களாகி விட்டோமே நாம். நம் இரண்டாம் பிரதமர், லால்பகதூர் சாஸ் திரியின் மறைவையும் நினைவூட்டி ஆறுதல் கூறுவர் அமெரிக்கர். என்ன சொல்லி நினைவூட்டுவர்? யாரோடு ஒப்பிட்டு ஆறுதல் கூறுவர்? 'செயற்கரிய செய்து முடித்து வெற்றிகண்ட அதே # 5. திடீரென ಘೀ சாஸ்திரி. ஆபிரகாம் லிங்கனப்போல், வெற்றி வேளையில் மறைந்தாரே சாஸ்திரி. எத்தனை பெரும் நில அதிர்ச்சி இது!’