பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 'ஏழையாகப் பிறந்தார் லிங்கன்; எளியராகப் பிறந்தார் சாஸ்திரியார். தன் முயற்சியால் கற்ருர் லிங்கன்; தன் பாட்டால் ...படித்துத் தேறினர் சாஸ்திரியும். உழைப்பால் உயர்ந்தார் லிங்கன்; நாட்டின் தலைவராக உயர்ந்தார். சாஸ்திரியும் உழைப்பால் உயர்ந்தார்; நாட்டின் நல்ல தலைவராக, உயர்ந்தார். 'கல்விச் செருக்கோ பதவிக் கர்வமோ இல்லா தவர் எங்கள் லிங்கன். கல்விக் கர்வமோ ப்தவிச் செருக்கோ கொள்ளாதவள் உங்கள் சாஸ்திரியும். ' எல்லோர்க்கும் செவிசாய்த்தவர் எங்கள் லிங்கனும் உங்கள் லால்பகதுTரும். எல்லோரையும் மதித்து நடந்தவர் இருவரும். ' = அமைதி விரும்பிகள் இருவரும். ஆயினும் சூழ்நிலை, போருக்குப் பிடித்துத் தள்ளிற்று இரு வரையும். நாட்டின் நலனுக்காகப் போரையும் உறுதியாக நடத்தி, வெற்றி கண்டனர் இருவரும். இணைந்திருப்பதா? பிரிந்து போவதா?’ என்ற புயலை அமெரிக்காவில் சமாளித்து ஐக்கிய அமெரிக் காவை நிலைபெறச் செய்தவர் லிங்கன். அதே புயல் இந்தியாவில் வீசியபோது, கலங்காது நின்று இணைந்த இந்தியாவை உறுதிப்படுத்திச் சென்றவர் சாஸ்திரி. அமெரிக்கர் அனைவரும் பொருமைப்படும் படியான, மாபெரும் இதாண்டாற்றிச் சிறந்த, கண்ணுக்குக் கவர்ச்சியில்லாத லிங்கனுக்கும், முந்தி ரிக்கொட்டை போல் முன்னே நின்ற பெரியவர் களெல்லாம் பொருமைப்படும் அளவு, நாட்டிற்கும் அமைதிக்கும் நற்ருெண்டாற்றிச் சிறந்து மறைந்த லால்ப்கது.ார் சாஸ்திரிக்கும் இரு வேற்றுமைகளே உள்ளன. லிங்கன் நெட்டையானவர்; சாஸ்திரி குட்டையானவர். இது முதல் வேற்றுமை. லிங்கன்,