பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முன்னேரோடு முடித்தது அறிவு என்று எண் ணியவரல்லர் அம் மேதை. பிழைப்புக்கு வழிதேடி அலைந்தவரல்லர் அவர். உற்றுக் கவனித் தார். ஒருமனப்பட்டுக் கவனித்தார். துணிந்து சிந்தித்தார். தாமாகச் சிந்தித்தார். நல்லதொரு முறையைக் கண்டு கொடுத்தார். விளைவு, உலகத் திற்கு நன்மை, நமக்கும் நன்மை. உலகத்தின் ஒப்புயர்வற்ற சாதனைகள் எல் லாம்-உலகத்தின் பெரும் கண்டுபிடிப்புகளெல் லாம்-உலகத்தின் ஒளிமயமான கொள்கைகளெல் லாம்-செம்மறியாட்டுப் போக்கைவிட்டு முன்னேர் விட்ட இடத்திற்கு அப்பாலும் துணிச்சலாக முன் னேறி, எடுத்த ஒன்றிலே முழுமனதாக ஈடுபட்டுத் தாமே கண்டு, கூர்ந்து சோதித்து, புகழ் பரணி யையோ, துாற்றல் புழுதியையோ திரும்பிப் பார்த் துச் சிந்தை கலையாமல் பாடுபட்ட ஒருமனத்தா ரால் ஏற்பட்டவை. இது நினைவிருக்கட்டும் தம்பீ! மக்கள் இனம், மானத்தோடு வாழ, அச்ச மற்று இருக்க, உரிமையோடு Զ-GՆ)6)I கல்வி வேண்டும். துறல் கல்வி அல்ல; இரண்டொரு அங்குல மழைக் கல்வியல்ல. கொட்டு கொட் டென்று கொட்டும் ஒரு மழைக் கல்வி வேண்டும். பரவல் கல்வி வேண்டும். எல்லோருக்கும் வேண்டும். எல்லா வயதினருக்கும் வேண்டும். . கொட்டும் மழைக் கல்வியால் பரவலான பலன் விளையுமா? எல்லோரும் கற்றுத் தேற முடியுமா? எதுவரை எல்லோரும் எட்டிப் பார்க் கலாம்? கல்லூரிக் கல்வி, கண்டவர்க்கெல்லாம் கொடுக்கலாமா? அதல்ை அவர்களாவது நன்மை யடைவார்களா? தாங்கள் தவறியதுமல்லாமல், கல்வியின் தரத்தைக் கெடுத்துவிட மாட்டார்