பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 என்பது கோணல் நிலை; அக் கோணலை நிமிர்த்து வோம். பிழைக்க, உழைக்க இது இயற்கை நிலை: பிழைக்க, தலையாட்டு இது நோய் நிலை. "பிழைக்கப் பல்லிளிக்க இது மற்ருெரு நோய். பிழைக்கச் சுரண்டு இதுவும் ஒரு நோய். வெறும் பிழைப்பிற்காக, மக்கள் இனம் பல நோய்களில் சிக்கிச் சீரழிகிறது. உடல் நோய்களைத் தடுக்கவும் போக்கவும் பாடுபடுவதுபோல, சமுதாய நோய்களையும் நீக்க வாரீர்! உடல் நலத்தை வளர்க்கச் சிந்தனையும் முயற்சியும், காலமும் பொருளும் செலவிடுகிருேம். மானத்தை வளர்க்க என் செய்வோம்? சிந்தனையை இக் கேள்வியின்மீது திருப்புங்கள். முயற்சியும் இப்படித் திரும்பட்டும். காலமும் பொருளும்கூடக் கண்டவற்றிற்கெல்லாம் செலவாக வேண்டா. மானத்தோடு, ஆண்மையோடு, உரிமையோடு, உண்மையோடு வாழும் மக்கட் சமுதாயத்தை உரு வாக்கப் பயன்படட்டும் அவை. உலகம் முழுமைக்கும், பலப்பல நன்மைகளை, பெரும்பெரும் நன்மைகளை விளைவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்படிப் பிறந்தன? யாரால் பிறந்தன? நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்த மேதை, கூட்டத்தின் கைதட்டலைக் கருத்திற் கொண்டாரா? கொண்டிருந்தால், கோமாளித் தனத்தையல்லவா கற்றிருப்பார்? சிந்திக்க வைப்ப தற்குப் பதில் சிரிக்க வைப்பதில் அல்லவா தன்னையும் உலகையும் பாழாக்கியிருப்பார்? தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று எண்ணியிருந்தாலும், எவரோ ஒருவருடைய அடைப்பக்காரராக அல்லவா சென் றிருப்பார்?