பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதி உண்டா? என்னருமைத் தம்பி, தங்காய்! நீங்கள் வாழவேண்டும். மண்ணில் வாழ வேண்டும். இப் பிறவியில் வாழ வேண்டும். நல்ல வண்ணம் வாழவேண்டும். வேளேக்கு வேளை வயிறு நிறைய சோறுண்டு இருந்தால் போதுமா? வீட்டில் வளரும் நாய்க்கும் வேளைக்கு வேளை சோறுண்டே! அந் நாய் இருப் போடு நாமும் இருந்து விடலாமா? சிந்தியுங்கள் உடன் பிறந்தோரே! - உடை வேண்டும் என்கிறீர்களா? உண்மை. பணக்காரர் வீட்டுத் தலையணை; அதற்கு, அடுத்து அடுத்து உறைமாற்றம் உண்டு. நமக்கும், அடுத் தடுத்து மாற்ற, உடை கிடைத்து விட்டால் நல் வாழ்வாகி விடுமா? தலையணை நிலை போதுமா நமக்கு? போட்ட இடத்திலே கிடந்து பயன்படும் தலையணை அல்ல நாம் என்கிறதா உங்கள் சிந்தனை? மெய்யான கூற்று. நம் விருப்பப்படி, வாழ நமக்கென்று ஒரு வீடு தேவையென்கிறீர் களா? ஒப்புக்கொள்கிறேன். உணவும், உடையும், உறையுளும் போதியபடி பெற்று இருப்பது மட்டும் மனித வாழ்வாகாது. பின் எது மனித வாழ்வு? மானத்தோடு வாழ்வது மனித வாழ்வு. அதுவே நல்வாழ்வு. g) GöUT விற்காக மண்டியிடும் நிலை ஆகாது. உடைக் காக, பாதந் தாங்கும் நிலையும் வேண்டா. உறை யுளுக்காக, இச்சகம் பேசித்திரிய வேண்டா. இத் தனையும் நம் உரிமை. உரிமையைப் பெற மானத்தை இழக்காதே தங்காய்! மானத்தை விற்றுத்தான் உயிரோடு இருக்க முடியும், நடமாட முடியும்