பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மேதைகளை? போ க் கு ச் சோதனைகள் என்ற 'வித்தைகளை', புதுமுறை ஆரூடங்களை-பிஞ்சுப் பருவத்தினரிடைக் கையாண்டு, கணக்கிலடங்கா தவர்களைக் கழித்துவிட்டு, இங்கொருவரை அங் கொருவரைப் பொறுக்கியெடுத்து, அப்பொறுக்கு மணிகளுக்கு தயார்தீனி கொடுத்துப் பெறவில்லை இந் நூற்ருண்டின் சித்தர்களே. மாருக, வெள்ளம் போல் கல்வியைப் பாய்ச்சினர்கள். மூலைமுடுக் கெல்லாம் பாய்ச்சினர்கள். எல்லோர்க்கும் பாய்ச் சினர்கள். மழைக்குக்கூடப் பள்ளிக்கூடப் பக்கம் ஒண்டாதவர்களெல்லாம் பல்கலைக் கழகங்களில் பெருநடை போடுமளவிற்குப் பாய்ச்சினர்கள். பாலையில், முட்புதர்களே ஏராளம். அங்கு வளரும் மரங்கள் இரண்டொரு வகையினவே. குறிஞ்சியில் பெருமழை பெய்யும். உயர்மலைத் தொடரில் எவற்றைக் காணலாம்? வானுற ஓங்கி வளர்ந்துள்ள உயர் மரங்களைக் காணலாம். பலவகையான உயர் மரங்களைக் காணலாம். நால்வகைப் படையினரும் ஒரே நேரத்தில் தங்குமளவிற்குத் தழைத்த மரங்களைக் காணலாம். தாவர வளர்ச்சிக்கு மழைப் பெருக்கம் தேவை. மானிட வளர்ச்சிக்குக் கல்வி மழைப் பெருக்கம் தேவை. உலகத்தில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் கல்வி மழைப் பெருக்கத்தைக் காண்கிருேம். பல்துறை பொருளாராய்ச்சியைக் காண்கிருேம். கல்வியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் குறிஞ்சியாக தமிழ் நாடு வளர்ந்து வருகிறது. இது நீடித்தால், பிற பகுதிகளுக்கும் இக் கல்வி மழைப் பெருக்கம் பரவினால், நம்மிடையிலும் உலக மேதைகள்-பலதுறை உலக மேதைகள்வளர்வார்கள். வானுற ஓங்கி வளர்வார்கள்.