பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இரண்டொருவர் அல்லர். பலப்பலர் வளர்வார்கள். இப் பழம்பெரும் நாட்டிலும், துறைதோறும் துறைதோறும் Ꮽ❍_©ö மேதைகள் பெருக வேண்டாவா? அதற்குத் துணையாகக் கல்விப் பெருவெள்ளம் ஒட வேண்டாவா? அதற்குத் தடையாக நாம் இருக்கலாமா? கூடாது, துணை யாக இருக்கவேண்டும். மழைவளம் பெருக மரங்களை-பல்வகைப் பெரும்மரங்களை - முளைக்கச் செய்யும். வளர்க்கச் செய்யும். அவற்றைக் காக்க வேண்டுமே! கண்டவை மேய்ந்துவிடாதபடி காக்கவேண்டும். வழிப்போக்கரெல்லாம் வெட்டி, ஒடித்து, அழித்து விடாதபடி பாதுகாக்க வேண்டும். இது ம்க்கள் பொறுப்பு. மக்களின் தலைவர்களாக உள்ளவர் களின் பொறுப்பு. சந்திர மண்டலத்தை எட்டிப் பிடித்துள்ள இன்றைய இரஷ்ய விஞ்ஞானிகளை-உலக மேதை அ5 - கண்ணிலும் அருமையாகக் காத்து வந்தனர் அந்த நாட்டவர். அன்ருட ஊர்ப் பசிக்கு, குழுப்பசிக்கு இரையாகாது காத்தனர். வழிபட்ட சிக்கல்களில் எல்லாம் எதிர்காலப் பேரறிஞர்களைச் சிக்கவைக்காமல், போராட்டங் களிலெல்லாம் தள்ளிப் பலியிடாமல், வாழையடி வாழையாகக் காத்தனர். விதை நெல்களை, பொங்கல் படையலுக்கு எடுப்பது சரியல்ல. பொறுக்கு விதை மணிகளை அவசர சோற்றுக்குப் பயன்படுத்தலாகாது. பாது காத்து வைத்திருந்து பருவத்தே விதைத்து, வளர்த் துக் காத்து, ஒன்று நூருகப் பலன்பெற வேண்டும். இவ்வழியைச் சோவியத் மக்கள் பின்பற்றுகின்றனர். இந் நல்வழியை, மானிட வளர்ச்சி வழியை அவர் களுக்குக் காட்டியது யார்? தலைவர் லெனின்,