பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கொடுங்கோல் மன்னனும் ஜார் ஆட்சியைக் கவிழ்ப் பதற்குக்கூட வருங்காலத்தவர்களை, எதிர்கால மேதைகளை, உலக விஞ்ஞானிகளாகப் போகும் மாணவர்களை இழுக்காது படியுங்கள், படியுங்கள், மேலும் படியுங்கள்’ என்று மட்டுமே மாணவர் களுக்குத் திட்டம் கொடுத்தார் லெனின். எதையோ மாற்றுவதற்கு, எதையோ க வி ழ் ப் ப த ற் கு, எதையோ தடுத்து நிறுத்துவதற்கு, அன்றைய மாணவர் சமுதாயம் பலி கொடுக்கப்படவில்லை. தலைவரைப் பின்பற்றும் பிற்காலத்தவரும் இந்த அறநெறியை விழிப்பாகப் பின்பற்றுகின்றனர். அதன் விளைவே சந்திர மண்டலப் பயணம். நாமும் செயற்கரிய செய்ய வேண்டாவா? உலக நாடுகளின் இடையே சமமாக, தலை நிமிர்ந்து நிற்க வேண்டாவா? ஆம் என்ருல் வழியென்ன? மாணவர்கள் ஒரே நேரத்தில் மாணவர் க ளாக வும், அரசியல்வாதிகளாகவும் இருக்க முடியாது, இருக்கக்கூடாது' என்று நம் தலைவர் பாரதத்தின் தந்தை. உலகத்தின் உத்தமர்அண்ணல் காந்தியடிகளார் வழிவகுத்திருக்கிருர். அந் நேர் வழியை, செங்குத்தான வழியை, நல்வழியை, உறு தி யாக கடைப்பிடிக்கவேண்டும். பின்னர் நாமும், நமது உரிய பங்கு, மேதைகளை வழங்கி ஒளி விடலாம். தன்சுடர் ஒளிகளாகத் திகழவேண்டிய தம்பிகளே, தங்கைகளே! கண்டவர் கையில் சிக்கும், பலரும் அழுத்திப் பார்க்கும் டார்ச்சு களாகலாமா?