பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாமையைத் துடைக்க வாரீர் என்னருமைத் தம்பி, தங்காய்! நீங்களும் நானும் உலகத்தின் மூத்த குடி. கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே தோன்றிய குடி. இது மகிழ்ச்சியை ஊட்டுகிறதா? இது_ நம் கடம்ையை நினைவூட்ட வேண்டுமே! மகிழ்ச்சியில் கடமையை மறக்கலாமா? தம்பீ! கடமை என்ன? மூத்த அண்ணனின் கடன்ம என்ன? காத்தல்; வளர்த்தல். எதைக் காத்தல்; எதை வளர்த்தல்? பெற்ருேரைக் காத்தல்; உற்ருர் உறவினரைக் காத்தல். தம்பி தங்கைகளைக் காத்தல்; வளர்த்தல். வீட்டைக் காத்தல்; நிலபுலன் களைக் காத்தல்; குடும்பமானத்தைக் காத்தல்: உடைமையை, உரிமையைக் காத்தல்; வளர்த்தல். தங்காய்! முதற்குடிக்கு முதல்தரமான கடமை உண்டு. பெருங்குடிக்குப் பெருங்கடமை உண்டு. முதற்குடியும் பெருங்குடியுமான நமக்கு முதல் தரமான பெருங்கடமைகள் உள்ளன. அவற்றைக் கண்டு அஞ்சாதீர். அவற்றை விட்டுவிட்டு இன்றைய பொறுப்புக்களில் இருந்து நழுவாதீர். தம்பி, இன்றைய பொறுப்பு என்ன? நிலைக்குத் தக்க பொறுப்பு, இதுவே இயற்கை நியதி. பச்சிளஞ் சிறுவனும் சிறுமியும் சாணி பொறுக்கி வாழ்வது இயற்கை நியதியல்ல. இது பெற்றேரின் பொறுப் பற்ற தன்மையின் விளைவு. சமுதாயத்தின் ஈரமற்ற நெஞ்சின் நோய், ஏதோ கல்வியாளன் ஒருவரின் கருத்து-பிரசாரக் கருத்து-என்று ஒதுக்கி விட்ாதீர். இக் கருத்தைக் கேட்க அஞ்சி செவிகளே வேறுபக்கம் திருப்பி, நம்மை நாமே வஞ்சித்துக் கொள்ளக் கூடாது. நாட்டையும் வஞ்சிக்கக் கூடாது. தம்பி! மாருக இக் கருத்தைக் கேள்: சிந்தி; ஏற்றுக்கொள்; இதில் நிலைத்து நில்; உறுதி