பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 யாக நிலைத்து நில். இக் கருத்து அங்கிங்கு எதைபடி எங்கும் வேரூன்றும்வரை நிலைத்து நிறைவேற்று. தங்காய்! இதோ காந்தியடிகளார்! அண்ணல் காந்தியடிகளார். இந்திய நாட்டின் தந்தை காந்தி யடிக்ளார்! நம் அரசியல் அடிமைத்தன_அவமானத் தைத் துடைத்த சான்ருேர் காந்தியடிகளார்: இவரது நல்லுரையையும் கேட்போம். உடன் பிறந்தோரே! இதோ உற்றுக் கேளுங்கள். இதோ வாழ்வுரை! சின்னஞ்சிறு குழந்தைகளைப் பள்ளிக்கூடத் திற்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டு, அவர்களைக் கலிவேலைகளில் ஈடுபடுத்துவது நாட்டின் கேவலத் திற்கு அடையாளம். குறைந்தது பதிறுை வயது வர்ையிலாவது அவர்களேக் கல்விக் கூடத்தில் வைத்திருக்கவேண்டும்.' கேட்டதா காந்தியுரை? இது வாழ்வு உரை. இது, இவன்ரயும் அவரையும் மட்டும் வளர்த்து விட்டு, பலரையும் ஒதுக்கிவிடும் உரையல்ல. எல்லோரையும் வளர்க்கும் உரை. எல்லோருக்கும் வாழ்வளிக்கும் உரை. இதுவே இன்றைய தேவை. சிறுவர் சிறுமியரைக் கல்வியில் ஈடுபடுத்த வேண்டும். பதினறு வயது வரையிலாவது வேறு வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது. இப் பொன் னுரையை நாம் உணர்ந்தால் போதுமா? மக்கள் இணரவேண்டாவா? எப்படி உணருவார்கள்? தாமே படித்து உணர முடியுமா? மூத்தோர் பலர் எழுத்தறி வில்லாதவர்களாயிற்றே. அவர்கள் இதைப் படிப்ப தெப்படி? சிந்திப்பதெப்படி? உணருவதெப்படி? எழுத்தறிவு பெற்ருல் படிப்பர். சிந்திக்கத் தூண்டினல் சிந்திப்பர். சிலராவது சிந்திப்பர். உணருவர். ஊருக்கு ஒருவர் இருவர் உணருவர். உணர்வுச் சூழல் விரியும். நல்ல சூழல் வளரும்.

  • =