பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'78 பொதுமக்களுக்கு எழுத்தறிவூட்ட நீங்களும் நானும் நம் சொந்தத்தில் செய்ததென்ன? ஒன்று மில்லை. இனிச் செய்யப் போவதென்ன? ஒன்று மில்லை என்று பதில் கூறலாமா? ஆகாது. உடன் பிறந்தோரே! நாம் பெற்ருேம் எழுத்தறிவு. நாம் பெற்ருேம் கல்வி. நம்மில் சிலர் பெற்ருேம் உயர் கல்வி. யார் செலவில் பெற்ருேம் இவற்றை? முழுவதும் தம் செலவில் கற்றவர் எவரோ ஒருவர். சம்பளம் கட்டிப் படித்த தம்பிகூடத் தன் செலவில் படித்த தாகக் கருத வேண்டாம். அவர் கட்டின சம்பளத் தோடு-அரசினர் பணம் அதாவது பொது மக்கள் விரிப்பணம் நிறைய சேர்ந்திருக்கிறது. படித்தவ ரெல்லாம் மற்றவர் வரியில்-மேலாடையற்றவரும் கட்டும் வரியில் படித்தவர் என்பதை உணர வேண்டும். யாருடைய உழைப்பில் உருவானேமோயாருடைய தியாகத்தில் கல்வி கற்ருேமோ-அவர் களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை நினைத்துக் கொள்ளுங்கள். நம் பட்டத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டாம். நம் படிப்புச் சீட்டைப் பிறருக்கு அளிக்க வேண்டாம். நாம் அறிவைப் பங் கிட்டுக் கொள்ளவேண்டாவா? எழுத்தறிவைப் பங் இட்டுக் கொள்ளவேண்டும். உயர் அறிவையும் பங் கிட்டுக் கொள்ளவேண்டும் தம்பி! நாம் பொதுமக்களுக்கு எழுத்தறிவு ஊட்ட வேண்டும். ஆண் மக்களுக்கு மட்டுமல்ல; பெண் மக்களுக்கும் ஊட்ட வேண்டும். ஏற்கனவே எழுத் தறிவு பெற்றிருந்தால், தொடர் அறிவு பெறத் துணை செய்வோம் வாரீர்!