பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 9 பண்டைக் கதையறிவு உண்டு நம் மக்களுக்கு. தெருக்கூத்தைப் பார்த்துப் பெற்ருர்கள் அவ் வறிவை. திரைப்படத்தைப் பார்த்துப் பெற்றதும் அதுவே. பாவலர், நாவலர் பொழிவதும் அதுவே. இன்று நம் மக்களுக்குத் தேவையான்து புதிய அறிவு: புத்தக அறிவு. வறுமை உளைச் சேற்றிலிருந்து வெளி யேற வழியறிய வேண்டும். காலைப் பின்னியிழுக்கும் வேற்றுமை வேர்களிலிருந்து விடுபடும் அறிவு வேண் டும். அழுக்கிலே வாழ்ந்து, நோயிலே நலிந்து போகாமல் தடுப்பதற்கான அறிவு வேண்டும் நம் மக்களுக்கு, நம்மாலே ஆவதொன்றுமில்லை என்னும் கையறு நிலைப் போக்கை மாற்றும் அறிவும், கருத் தும் தேவை நம் மக்களுக்கு முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும் என்னும் நம்பிக்கைப் போக்கை வளர்க்கும் அறிவை அளிப்போம் நம் மக்களுக்கு. கோபுரத்தில் உட்கார்ந்து உபதேசிக்க வேண் டாம். நாம் பொது மக்கள் நிலைக்கு வந்து, அவர் களோடு இருந்து, அவர்களோடு சேர்ந்து, அவர் களுக்கு எழுத்தறிவையும் வளர் அறிவையும் பகிர்ந் தளிப்போம் வாரீர்! இதுவே இன்று நாம் செய்ய வேண்டிய சமுதாயப் பன்னி; நாட்டுப் பணி. மொழித் தொண்டுமாகும். ஒரு சில முத்தமிழ்ச் செல்வரும், சில பல இருமொழிப் புலவரும் போதும் என்று நிறைவுகொண்டே ஏமாந்தோம் நாம். பின்னடைந் தோம் நாம். அரைத்த மாவையே அரைத்து அலுத்து விட்டோம் நாம். உடன் பிறந்தோர்ே! நீங்கள் மாற்றவேண்டும் இந் நிலையை. 'நம்மவர் அடிமைகள் என்ற அவமானத்தைத் தாங்காது, கொதித்து எழுந்தது முந்திய தலைமுறை. அலே அலையாக அடக்கு முறை வந்தாலும் அஞ்சாது, விடுதலைக்குப் போரிட்ட்து அந்தத் தலைமுறை. அரசியல் அவமானத்தை அடியோடு அழித்தது அத் தலைமுறை.