பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 0 'நம்மவர் தற்குறிகள் என்ற அவமானத்தை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண் டிருப்பது? நமக்குத் தன்மானமில்லையா?தரணியாண் டவன் என்று ஆர்ப்பரித்துக்கொண்டே தற்குறித் தனத்தை மறந்து விடலாமா? உடன் பிறந்தோரே! எழுத்தறியாமை சமுதாய அவமானம்.அதைத் துடைப்பது நம் கடமை, முதற் கடமை. அக் கடமையாற்ற முற்படுவீர். கோடை விடுமுறையை விணக்காதீர். அக்கம் பக்கத்திலுள்ளவர்களை அணுகுங்கள். அவர்கள் விரும்பும் சொற்களே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்களைச் சிறுமைப்படுத்தாமல் கற்றுக்கொடுங்கள். வீடுதோறும் குடிசைதோறும் எழுத்தறிவு என்னும் விளக்கை ஏற்றிவையுங்கள், அறிவொளியைத் துண்டி விடுங்கள். இது பெரும் பணி; நற்பணி; இதன் தொடக்கம் அடக்கமாக இருக்கட்டும். விளம்பரத்திற்காக எவ ரையும் தேடி அலையாதீர். பேராலமரம் இரைச்சல் இட்டுக் கொண்டு முளைப்பதில்லை, சந்தடியின்றி முளைத்து விடுகிறது, வளர்ந்து விடுகிறது. எழுத்தறிவு இயக்கமும் இரைச்சலின்றிப் பகட் டின்றி முளைத்து விடட்டும். ஒய்ந்த நேரமெல்லாம் வளரட்டும். தம்பிகளே, தங்கைகளே! அறிவு விடு தலைக்கு அர்ப்பணியுங்கள் உங்களை. ஆயினும் உங்கள் கல்விக்கு இடையூருக அர்ப்பணிக்க வேண் டாம். விடுமுறை நாட்களை அறிவுப்பயிருக்கு ஒதுக் குங்கள் போதும்.