பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் அழைக்கிறது அருமைத் தம்பி, தங்காய்! உங்களையும் என்னையும் உலகம் அழைக்கிறது. நமக்கு மட்டுமா அழைப்பு? இல்லை. நம்மோடுள்ள பலரையும் அழைக்கிறது. எதற்கு அழைக்கிறது உலகம்? வாழ அழைக் கிறது உலகம். - 'இதோ இருக்கிருேமே!இதற்கென்ன அழைப்பு இதுவன்ருே உங்கள் ஐயம். இருப்பது வேறு தம்பி. வாழ்வது வேறு தங்காய் இருப்பதும் வாழ்வதும் ஒன்றல்ல. உயி ரோடு இருப்பவர்களெல்லாம்-இருப்பவைகளெல் லாழ்-செய்வது. இருப்பது, வாழ்வது, இருப்பவர் களிலே சிலரே செய்வது. மற்றப் பலரோ கட்டை வண்டிக்கு முன்பளு, பின்பளு. பிறந்தோம். அது நம் இச்சையால் அன்று. இன்று இருக்கிருேம். இதுவும் நம் சதுராலன்று தம்பி! வாழ்வது நம் முயற்சியால். அது ஒன்று தான் நமக்குரியது. அதுவும் முழுக்க முழுக்க நமக் குரியதன்று. ஆயினும் அதற்கு நாம் ப்ங்க்ாளிகள். இதை உணருங்கள் உடன் பிறந்தோரே. எது வாழ்வது? எவர் வாழ்வார்? வசையொழிய வாழ்வது வாழ்வு. அவரையும் இவரையும் தள்ளி மிதித்துவிட்டு வாழ்வது வாழ்வன்று. பலிக்குமிட மெல்லாம், அடாது செய்து, பழியைப் பொருட் படுத்தாது வாழ்வதும் வாழ்வன்று. பிறருக்குத் துன்பம் விளைவிக்காது, பழிக்கு அஞ்சி, கொடுமைக் குக் கூசி, நேர்மைக்குத் துணையாக நிமிர்ந்து நின்று, வாழ்வதே வாழ்வு வசையொழிய வாழும் அச் சான் ருேரே வாழ்வார். גt - חJה . ה)