பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முழுமைக்கும் பொதுச் சொத்து. ஆகவே அறி வைப் பெருக்கிக் கொள்வோம். நம் அறிவு தீயதாயிருக்கிறதா? அதைத் திருத்திக் கொள்ள உலகம் அழைக்கிறது. மனிதனை மனிதன் குறைவாகக் கருதுவதும், இழிவாக நினைப்பதும், நடத்துவதும் திய அறிவு. மனிதனை மனிதன் வெறுப்பதும், ஒதுக்குவதும் திய அறிவு. மனிதனை மனிதன் சமமாக மதிப்பது, நடத்துவது நல்லறிவு. சேரவாரீர் செகத்திரே!” என்று மக்கள் அனைவரையும் இணைத்துக் கொள்வது நல்லறிவு. அத்தகைய நல்லறிவு உலகிற்குத் தேவைப் படுகிறது. எவ்வுலகிற்கு? கிணற்றுத் தவளைக்குக் கிணறே உலகம். குட்டை மீனுக்கு குட்டையே உலகம். குகை மனிதனுக்குக் குகையே உலகம். கற்கால மனித னுக்குத் தன்னுாரே உலகம். பிற்கால மனிதனுக்கு அக்கம்பக்கமே உலகம். வானொலிக் கால மனி தனுக்கு எது உலகம்? இக் கால மனிதனுக்கு எது உலகம்? விண்வெளிக்கால மனிதனுக்கு எது உலகம்? நில மண்டலம், முழுமையும்--ஏன் அண்டம் முழுமையும்- அவன் உலகம் அல்லவா? நம் மூதாதையர் காலத்தில், மாந்தர் அறிவு, நல்லறிவு, தன் ஊருக்கப்பால் விரியவில்லை. பின்ன்ர் அக்கம் பக்கத்திற்குப் பரவிற்று. அறிவு பயன்படும் எல்லை விரிந்து, விரிந்து இன்று Զ- նն)6Ծ)Յ, வளைத்துக் கொண்டது. இன்ருே நல்லறிவு ஊர் உலகோடு, நாட்டு உலகோடு தேங்கி நிற்காமல், நில உலகம் முழுமைக்கும் பாய்ந்து ஒடுகிறது. இந்தியாவில் உணவுத்