பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

ஏன் திகைப்பு தம்பிகளே? இதுவரை கேள்விப் பட்டதற்கு நேர்மாருகக் கூறுகிறேனா? இருந்தால் என்ன, பலமுறை கேட்டதால், பொய் மெய்யாகி விடுமா? முதன்முறை கேட்பதால், உண்மை பொய்யாகி விடுமா? வள்ளுவரை தமிழ் இனமாகக் காட்டியது மாயையா? வள்ளுவரை மக்கள் இனமாகக் காட்டுவது மாயையா? ஷேக்ஸ்பியரை ஆங்கில இனத்தவராகக் காட்டியது, குருடன் கண்ட யானையா? வேடிக்ஸ்பியரை செகப்பிரியராகக் காட்டுவது குருடன் கண்ட யானையா? டால்ஸ்டாயை இரஷியராகக் கண்டது தோற்ற மயக்கமா? டால்ஸ்டாயை மக்கள் இனத்தவராகக் காண்பது தோற்ற மயக்கமா? சிந்தித்துச் சொல்லுங்கள்.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொன்னதைச் சொல்லுதல் அறிவுடைமையா? உண்மையைக் காணுதல் அறிவுடைமையா?

தம்பிகளே! தங்கைகளே! வாருங்கள் உண்மையைக் காண்போம்.

இதோ, பச்சைக் குழந்தை; இரண்டொரு மணிகளுக்கு முன்னர் பிறந்த குழந்தை. எங்கே பிறந்த குழந்தை சேக்கிழார் மரபிலே பிறந்த குழந்தை. எனவே, தமிழ்க் குழந்தை என்று அழைக்கத் தோன்றும் நமக்கு. பட்டஞ் சூட்டு வதைக் கொஞ்சம் நிறுத்துவோம்.

இவ்விளங் குழந்தையை எடுத்துச் செல்வோம்; பாதுகாப்பாக எடுத்துச் செல்வோம்; ஆகாய விமானத்தின்மூலம் கொண்டு செல்வோம்; எங்கே செல்வோம்? கல்கத்தா செல்வோம்; அப்புறம்? தாகூர் பரம்பரையில் அன்பர் ஒருவரைத் தேடிப் பிடிப்போம். அவரிடம், சேக்கிழாரின் வழிவழி