பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

கொண்டு. இதுவே முழு உண்மை என்று உரைக்கிறோம்.

தோள் கண்டார் தோளே கண்டார்' "தாள் கண்டார் தாளே கண்டார்’

என்றபடி, மொழிகண்டார் மொழியே கண்டார். நாடு கண்டார் நாடே கண்டாராக நாம் இன்னும் வாழவேண்டுமா? இந் நாளிலாவது நம் நிலையை, பெரு நிலையை, மக்கள் இனம் என்னும் ஒரு நிலையை எண்ணிப் பார்க்க வேண்டாவா?

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு

என்னும் பொய்யாமொழியின் பொருள் ஆழம் காண வேண்டாவா? உங்களைப் பரீட்சையில் எளிதில் தேறவைப்பதற்கா எழுந்தது இக் குறள்? வாழ்க்கைப் பரீட்சையில் தேறவைக்கப் பிறந்த தல்லவா இவ்வறவுரை! உங்கள் கல்வி, உங்கள் முழு நிலையை உணர்த்த உதவட்டும். அது வெறும் படிப்பாயில்லாமல், சீட்டுப்பெறும் உபாயமாக இல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டும் கல்வியாகப் பயன்படட்டும்.

தம்பிகளே! தங்கைகளே! நீங்களும் நானும், மொழியால் தமிழர், நாட்டால் இந்தியர், இனத்தால் மக்கள். இதுவே முழு உண்மை. அடிப்படை உண்மை. இதைச் சிக்கெனப் பிடியுங்கள்; செம்மையாக வாழுங்கள்.