பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.8 கனியாகும். பண்பட்ட கனியாகும். அதுவே மக்கட் பண்பாகும். அப் பண்பைப் பெறும்போது, நீ முழுதும் கனிந்த மனிதவைாய். சிறந்த மனித வைாய்; வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனித வைாய். அந் நன்னிலையை அடைய விடாது முயல் (6)] TTULITTe{}5. தம்பீ! நீ பெற்றபேறு உனக்காக-அல்லதுஉன் உற்ருர் உறவினருக்காக மட்டும், எப்படியும் காப்பாற்றப்பட வேண்டியது என்று கருதாதே. நாடெல்லாம் வாழக் கேடொன்றுமில்லை. இது மயக்குச் சொல் அன்று, தெளிவுரை. மெய்யான தெளிவுரை. எனவே, உன் அறிவை, ஆற்றலை, பண்பை மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ ஆயத்தப் படுத்திக்கொள். வளர்க, நீ முத்துறையிலும். வாழ்க, நீ வாழ்வாங்கு.