பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | -நாலாப் பக்கங்களிலும் நல்லெண்ணம் தேவை. இவற்றைப் பெறும் வழியென்ன? அடக்கம், பணிவு, அன்புடமை, இன்சொல் ஆகியவற்றின்மூலம் தொடர்புகளையும் நல்லெண் ணத்தையும் வளர்க்கலாம். இதை உணர்ந்து, மனிதரை மனிதராகக் கருதிப் பழக, கூடிவாழ முயல்வாயாக, விடாது முயல்வாயாக. எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஒர் விலை என்ற பாரதியின் கனவு, உன் மூச்சாகும்வரை, தளராது முயல் ᎧᏂᎫᎱᎢ ᏞᎫᎱᎢéᏂ . சுறுசுறுப்பால், காலங் கருதிச் செய்யும் முயற் சியால், கூடிவாழும் திறமையால், உனக்கு அறிவு, ஆற்றல்,துணைவலி ஆகியவை பெருகும். வெற்றி வளரும். இவற்ருல் மட்டும் நீ முழு மனிதனுக வாழ்ந்திட முடியாது. மனிதனுக வாழ பட்டம், பதவி, அதிகாரம் மட்டும் போதா, மனிதத் தன்மை, மக்கட் பண்பு தேவை. அரம் போலும் கூர்மையரேனும், மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதார் என்பது பொய்யாமொழியன்ருே? மக்கட் பண்பு என்பது என்ன? அதை எப்படி அடையலாம்? மனம் உடையவன் மனிதன். மனம் உறுதி யுடையது மட்டுமன்று: ஆழமுடையது மட்டுமன்று: ஈரமுடையது; உருகும் தன்மை உடையது; இரங் கும் இயல்புடையது; துன்பத்தைக் கண்டு துடிக்கக் கூடியது; அன்பைப் பொழியக் கூடியது; அருளே வழங்கக் கூடியது. பிறிதிைேய் தன்ைேய்போல் நோக்கக்கூடியது. இத் தன்மைகளைச் சரியானபடி வளர்ப்பாயாக. அப்போது முழு மனிதவைாய். இத் தன்மைகளின் இயல்பான விளைவென்ன? பகுத்துண்டு பல்லுயர் ஒம்புதல் மனதின் சிறந்த