பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தம்பீ! ஆற்றல்களில் சிறந்தது, கூடிவாழும்' ஆற்றல். நீ மிகவும் கெட்டிக்காரன். நல்லது. நீ மிக்க திறமைசாலி. மறுக்கவில்லை. ஆயினும் உனக்கு நான்கு பேரோடு சேர்ந்து வாழ, சேர்ந்து பல செயல்களைச் செய்து முடிக்கத் தெரியாவிட்டால் பயன் என்ன? நீ காட்டிலா தனித்து வாழப் போகிருய்? அப்படி வாழ்பவனுக இருந்தால், ஒருக் கால் உன் அறிவின் உயர்வையும், ஆற்றலின் மிகுதி யையும் எண்ணி, இறுமாந்து மற்றவர்களை ஒதுக்கி விட்டு இருக்கலாம். ஆனால், நீயோ நாட்டிலே வாழ்பவன்; நான்குபேர் நடுவிலே வாழ்பவன். ஆகவே உனக்கு, கூடிவாழும் திறமை வேண்டாவா? உலகம் பலவிதம் என்பது உனக்குத் தெரியாதா? உலகத்திற்குப் போவானேன்?உன்னையே நீ எண்ணிப் பாரேன். காலவோட்டத்தால் உன் உருவிலே மாற்றம். அதோடு உன் கருத்திலேயே, எத்தனை வளர்ச்சிகளை-எத்தனை மாறுதல்களைக் காண்கிருய். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன், நீ பாலகய்ை இருந்தபடி இன்று நீ இல்லையே, அதற்காக உன் ளுேடு நீ கோபித்துக்கொள்ள முடியுமா? அம் மாற் றத்தின் காரணமாக உன்னை நீ அலட்சியப்படுத்த லாமா? உன்னை நீ இழிவாகக் கருதுவதா? இதைப் போலத்தானே உன்னைச் சுற்றி வாழும் மக்கள் நிலையும். அவர்கள் கருத்தால், கொள்கையால், பழக்க வழக்கங்களால் உன்னிலும் வேறுபட்டிருக்க லாம்; அவர்கள் மாறுபட்ட பல்வேறு தோற்றங் களைப் பெற்றிருக்கலாம். அதற்காக அவர்களை அலட்சியப்படுத்தலாமா?அவர்களிடமிருந்து ஒதுங்கி ஒடலாமா? மற்றவர்களோடு சேர்ந்துவாழ விரும்பா விட்டால் உன் வாழ்வின் வேர் குறுகிப்போகுமே. அப்போது, உன் வாழ்வு, எப்படி அகன்று உயர்ந்து வளரும்? வாழ்வின் வெற்றிக்குப் பரந்த தொடர்பு