பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 9 பகலவனே, உன் விழிப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கச் செய்யாதே! நீ அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கப் பழகிக்கொள்.அதா வது விடியற்காலையில் எழுந்திருக்கக் கற்றுக்கொள். எந்த நாளும் இந்தப் பழக்கத்தைக் கைவிடாதே. இதனால் விளையும் நன்மை அளவிடற்கரியது. இதைக் காலம் காட்டும். பட்டறிந்து சொல்கிறேன் என்பதை மட்டும் இப்போது உணர் தம்பீ! காலம் பொன்னிலும் மணியிலும் விலையுயர்ந் தது. இழந்த பொன்னே-பொருளை-மீண்டும் பெற் முலும் பெறலாம், ஆல்ை இழந்த காலத்தைத் திரும்பப்பெற முடியாது. இவ்வுண்மையை மறக் காதே. காலத்தை வீணுக்காதே. விளையாட்டு வாழ்க்கைக்குத் தேவை. வெறும் பொழுதுபோக்கோ வீண். ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் இருப்பதை இயற்கையில் காண்கிருேம். அப் பருவநிலைக்கு மனிதனும் பெரும்பாலும் கட்டுப்பட்டவின்ே. கற் பதற்குக் காலவரம்பு இல்லை. என்ருலும் இளம் பருவத்திலே கற்பது எளிது. இப் பருவமே, வேறு பொறுப்புகள், கவலைகள் கெளவாதது. எனவே, உன் இளமைப் பருவமே கற்பதற்குச் சிறந்த காலமாகும். அக்காலத்தில் எவ்வளவு ஆழமாகவும், அகலமாகவும் கற்றுக் கொள்கிருயோ, அவ்வளவு நன்மை பிற்காலத்திற்கு எதிர் காலம் எவற்றை இயல்லாம் வைத்துக்கொண்டு உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதோ? யார் கூற முடியும்? ஆகவே எத்தனே கலைகள் பற்றி அறிய முடியுமோ, அத்தனை கலைகளே அறிந்துகொள். எவ்வளவு திறமைகளைப் பெறமுடியுமோ, அவ்வளவையும் பெற்றுக்கொள். எதிர்பாராத நேரத்தில், அவற்றுள் ஏதாவது ஒன்று உனக்குக் கைகொடுக்கும்.