பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 நல்வாழ்வு வாழ, வகை சில சொல்லுகிறேன் கேள் தம்பீ. உன்னை நீ நம்பு. வாழ்க்கையின் உயிர் நாடி நம்பிக்கை. உன்னிடம் அறிவு உண்டு; ஆற்றல் உண்டு; மக்கட் பண்பு உண்டு; இவை, உன்னில் நீறுபூத்த நெருப்புப்போல் இருக்கின்றன என்று நம்பு. தன்னம்பிக்கையில்லாதவன் எதையும் செய்ய முடியாது. சிறந்தது எதையும் பெறமுடியாது. ஆகவே உள்ளத்தனையது உயர்வு' என்பதை மறவாமல் நம்பிக்கையோடு பாடுபடு. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்! எவர்? திண்ணியர். மனித வாழ்வு, நல்வாழ்வு வாழ வேண்டுமென்று, ஏதோ காற்றுவாக்கிலே பொழுது போக்காக நினைக்காதே. உறுதியாக எண்ணி, ஆழமாக முடிவுசெய்துகொள். முடிவு முயற்சியாக வேண்டும். அதுவும் இடை யருத முயற்சியாக வேண்டும். முதன்முதலில் நீ கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கம் சுறுசுறுப்பு: உலகில் உயர்ந்தது. சிறந்தோர் எவரும் சோம்பிக் கிடந்ததில்லை:தேம்பி நின்றதுமில்லை. ஓயாத உழைப் பால், மெய்மறந்த உழைப்பால், குறிக்கோளை மறவாத-வேளைக்கு வேளை மாற்ருத உழைப்பால், காலாகாலத்தில் கருத்தாய்ச் செய்த முயற்சியால் உயர்வு பெற்றிருக்கிருர்கள். அவையத்து முந்தி யிருக்கிருர்கள். உங்களுக்கும் அதே வழி. வேறு வழி இல்லை. வாழ்வனவற்றுள், சிறியது சிற்றெறும்பு. ஆனல் அதன் சுறுசுறுப்பு எவ்வளவு பெரியது பார்த்தாயா? அதனிடமிருந்து நீ ஏன் பாடங் கற்றுக்கொள்ள கூடாது? நான் கற்றுக்கொள்வதற்கும் காலங்கடக்க வில்லையே!