பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் முறை அருமைத் தம்பி, தங்காய்! நீங்கள் வாழப் பிறந்தவர்கள். உங்கள் வாழ்க்கை வாழ்வதற்காக. அதோ தோட்டம். அதிலே இருக்கின்றன மரஞ்செடி கொடிகள். பக்கத்திலே தொழுவம். அதில் கட்டுண்டு கிடக்கின்றன. கறவைப் பசுக்கள். அவற்றைப் போல் இருந்து வல்லானுக்குப் பயன் பட்டு, இறக்கப் பிறந்தவன் அல்லன் நீ! உன் நிலை யும் அதுவன்று தங்காய். நீங்கள் அனைவரும் தன் னறிவு பெற்று, ஆற்றலைப் பெருக்கி, பாடுபட்டுத் தேடிப் பகுத்துண்டு, உரிமையோடும் ஒழுங்கோடும் துணிவோடும் வாழப் பிறந்தவர்கள். நீ எங்கே பிறந்தாய்? ஓட்டைக் குடிசையிலா? இருக்கட்டும். குனிய வேண்டாம். உள்ளத்தில் குனியவேண்டாம். பிறந்தது பட்டிக்காட்டிலா? பரவாயில்லை. நாடாளுமன்றம் உன்னை ஏற்கும்; உலகப் பாராளுமன்றம் உன்னை ஏற்கும் நாள் வரும். படிப்பறியாக் குடும்பத்தில் பிறந்தாயா? போகட்டும். நானதே! அறிவுலக அறைகூவலை ஏற்றுக் கொள். ஊழையும் உப்பக்கம் காண்போம் ! חוקo தங்காய்! உனக்கும் வாய்ப்பு உண்டு. நல்ல நல்ல வாய்ப்பு உண்டு. சமவாய்ப்பு உண்டு. ஆகவே அச்சந்தவிர்; அழுக்காறு அகற்று. தம்பீ! எங்கே பிறந்தாலும் நீயும் மனிதனுக, தன்மான மனிதனுக, பண்பட்ட மனிதனுக, உரிமை யுள்ள மனிதகை, பெரும்பொறுப்பு ஏற்கும் மனித கை வாழலாம். அப்படி வாழ்வது உன் கையிலிருக் கிறது. உன் உறுதியிலிருக்கிறது. உன் முயற்சியி லிருக்கிறது. தங்காய்! உனக்கும் இதுவே விதி.