பக்கம்:எல்லோரும் வாழ வேண்டும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இந்தத் தொகுப்பில் சமுதாய வாழ்வு பற்றிய சிந்தனேக் கட்டுரைகள் சில இடம் பெற்றுள்ளன. சமுதாய வாழ்வின் அடிப் படைப் பண்பாடே, எல்லோரும் வாழ வேண்டும் ' என்பது. அதே தலைப்பில் இந் நூலின் முதற் கட்டுரை அமைகின் றது. எனவே இந்நூலுக்கும் அதுவே பெயராக அமைந்துள்ளது. இந் நூலில் உள்ள கட்டுரைகள் இருபத்து ஐந்தும் தனித்தனி வேளைகளில் வெவ்வேறு நிலைகளில் எழுதப்பெற்றன. எனவே ஒருசில கருத்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருக்க லாம். அவற்றை நீக்கின் கட்டுரையின் போக்கே நிலைமாறும் என்ற காரணத். தாலே அப்படியே விட்டுள்ளேன். பயி லும் அன்பர்கள் பயன் காண்பதோடு தவறு உளதாயின் காட்டவும் வேண்டு கிறேன். நூல் வெளிவர உதவிய அனை வருக்கும் நன்றி. - சென்னை-30 தமிழ்க்கலை இல்லம் அன்புள்ள, 1—9—’62 அ. மு. பரமசிவானந்தம்