பக்கம்:எழில் உதயம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தியானந்தம் 99

அம்பிகையைத் தரிசிக்க வேண்டும் என்ற கருத்தைப் புலப் படுத்துவதே யாகும்.

‘மறையாய் மறைப்பொருளாய்ப் பொருள் முடிவுதாளுய் ......இடம்பிரியா எம்பிராட்டி’ என்பது திருவிளையாடற் புராணம்.

வேதம் யாவரும் ஒதுவதற்கு உரியதன்று. ஒதுப வர்கள் யாவருமே அதன் பொருளை உணர்ந்தவர் என்றும் சொல்ல முடியாது. அப்படி உணர்ந்தாலும் அதில் ஒன்றிய அரும் பொருளாகிய அம்பிகையை உணர்வது மிகவும் அருமை. இத்தகைய அருமைப் பாட்டை உடைய அம்பிகையை எல்லோரும் எப்படி உணர முடியும்? எப்படி அணுக முடியும்? -

இப்படி ஒர் ஐயம் எழுவது இயல்பே. ஆளுல் அம்பிகை வேதத்தில் உறையும் அரும்பொருளாக இருப் பினும் குழந்தைகளுக்கு எளியவள். மகாராணியைக் குடிமக்கள் எளிதில் காண முடியாது. ஆனல் அவள் வெளிப்பட்டுக் காட்சியளிக்கலாம். .

தேவியும் அத்தகைய கருணை உடையவள். தாயே கருணைக்கு இருப்பிடம். -

X- தாயிற் சிறந்த தயாவான தத்துவனே."

என்று தயைக்குத் தாயை உவமை சொல்வது வழக்கம். எக்காலத்தும் எவ்வுயிருக்கும் தாயாக இருக்கும் அம்பிகையோ தயையே வடிவாக இருப்பவள். அந்தத் தயையில்ை அவள் அன்பு செய்வார்க்கு எளிய பொரு ளாகவும் விளங்குகிருள். அவளை, . .

அருளே . . . . . .

என்று அழைக்கிருர் அபிராமிபட்டர். "தயாமூர்த்தி' என்று லலிதா சகசிராமம் (58) அவளைத் துதிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/107&oldid=546264" இலிருந்து மீள்விக்கப்பட்டது