பக்கம்:எழில் உதயம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரமர் மேனிக் கணபதி

அபிராமியைப் பாடத் தொடங்குகிருர் அபிராமி பட்டர். அந்தப் பெரும்ாட்டியின் திருவருளால் பாடத் தொடங்கினரானலும், அப்பிராட்டியின் குமார்னகிய கணபதியைத் தொழுதுதானே எதையும் தொடங்க வேண்டும்? எந்தக் காரியம் யார் செய்தாலும், உன்னை வழிபட்டால் விக்கினத்தை நீக்கவும், வழிபடாமல் இருந் தால் விக்கினத்தை ஆக்கவும் செய்யும் அதிகாரம் உனக்கு உண்டு’ என்று தாயும் தந்தையும் சேர்ந்து அருளியபடி விநாயகர் விக்கினேசுவரராக எழுந்தருளியிருக்கிருர், முப்புரம் எரித்தபோது இந்தச் சட்டத்தை மீறி விக்கினே சுவரரை வழிபடாமல் சிவபெருமான் புறப்பட்டபோது, அவனுடைய தேரின் அச்சு விநாயகர் ஆணையால் ஒடிந்து விட்டது என்பது புராணவரலாறு. சட்டத்தை உண்டாக் கினவனைலும் அவன் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற உண்மையை இந்தத் திருவிளையாடலால் இறைவன் உணர்த்திஞன்.

ஆகவே, அபிராமி அந்தாதியைப் பாடுவதற்கு அப் பெருமானுடைய கருணையும் இருந்தால் அது எளிதில் நிறைவேறும் அல்லவா? அந்தக் கணபதியினரிடம், 'பெருமானே, உன்னுடைய அன்னையாகிய அபிராமியைப் பாடப் போகிறேன். அதற்கு வேண்டிய உதவியெல்லாம் புரியவேண்டும்" என்று பிராத்தனை செய்து கொண்டு, முதலில் விநாயகர் காப்பைச் சொல்கிருர் அபிராமி பட்டர். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/16&oldid=546173" இலிருந்து மீள்விக்கப்பட்டது