பக்கம்:எழில் உதயம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகல் 217

அழகுத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளுகிருள். கருவி கரணங்களுக்கு அப்பால் நுண்பொருளாக இருக்கும் பெருமாட்டி ஆருயிர்களை நோக்கி உருவமும் நாமமும் படைத்து வருகிருள். அப்படி வரும் தாயை நெடுஞ் சேய்மையிலே கண்டு ஒடிக் காலப் பற்றிக்கொள்ளுதல் நல்ல குழந்தையின் இயல்பு. சில முரட்டுக் குழந்தை களோ அன்னை எப்படி வந்தாலும் அவளுடைய கருணைச் செயலை உணராமல் மனம்போன போக்குப்படி ஒடுகிருர் கள், வீட்டில் இருந்து அன்னை அன்புடன் ஊட்டும் உணவை நல்ல குழந்தைகள் உண்ணுகிருர்கள். பொல் லாத குழந்தையோ வீட்டுக்குப் புறம்பே போய் வீதியி லுள்ள மண்ணைத் தின்கிறது. வீடு அன்னேயின் ராஜ்யம். அதற்குள் இருந்து விளையாடும் குழந்தை அன்னையைப் பற்றிக்கொண்டு நல்ல உணவைப் பெறுகிறது. அன்னை யின் அருள் எல்லையாகிய வீட்டைக் கடந்து புறம் போந்து புழுதியையும் மண்ணையும் உண்ணும் குழந்தையை அன்னை நாடி வந்து அடிக்கிருள்; அடித்துத் திருத்துகிருள். அதுபோல எம்பெருமாட்டியின் அருள் எல்லையில் நின்று அவளை அணுகிப் பணிந்து நலம் பெறுகிருர்கள் நல்ல பிள்ளைகள். அல்லாதவர்களோ அந்த எல்லைக்குப் புறம்பே வந்து பிரபஞ்ச வாசனையில் ஈடுபட்டு இந்திரியத் துக்குப் பொருளாகும் நுகர்ச்சிகளையே நுகர்கிரு.ர்கள். தன்னை அணுகாமல் இவ்வாறு பிரபஞ்சச் சேற்றில் உழலு கிற குழந்தைகளைத் திருத்துவதற்காக எம்பெருமாட்டி அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிருள். அவர்களுக்குத் தாயாக நிற்பினும் இப்பொழுது திருத்தும் பொருட்டு ஒறுப்பவளாக, நோயாக வருகிருள். இதனை நினைந்து,

அணுகாதவர்க்குப் பிணியே!

என்கிருர். பொல்லாத பிள்ளைகள் தம்முடைய தாயைப் பேயென்றும் நோயென்றும் சொல்லுவது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/225&oldid=546380" இலிருந்து மீள்விக்கப்பட்டது