பக்கம்:எழில் உதயம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 எழில் உதயம்

வெறும் பொருளுக்கே இந்த நிலையென்ருல், சத் சங்கத்திலே ஈடுபடுவதற்கு இன்னும் பெரிய தவம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர் பின்னும் சிலரே என்பதில் ஐயம் இல்லை.

அபிராமி பட்டர் இதை நினைவாகச் சொல்லுகிருர், "தாயே, நான் உன் அடியார்களின் பின்னே திரிந்து அவர்களே வழிபட்டுப் பிறப்பை அறுக்கும்பொருட்டு முற் பிறவிகளில் நிறைந்த தவத்தைச் செய்து அதன் பயனை அடைந்திருக்கிறேன்” என்கிருர்,

பின்னே திரிந்து உன் அடியாரைப்

பேணிப் பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன்.

இப்போது விளைந்த விளைவைக்கொண்டு முன்னே இதை விதைத்திருக்க வேண்டும் என்று அநுமானித்துச் சொன்னது இது.

யாரேனும் ஒரு செல்வரிடம் பொருள் உதவி பெற வேண்டுமானல், அவருக்குப் பின்னலே சென்று அவர் போகும் இடங்களெல்லாம் போய், அவர் உள்ளம் இரங் கச் செய்கிருன் ஏழை. யாராலேனும் ஒரு காரியம் ஆக வேண்டுமாளுல் அவர் பின்னே திரிந்து, காலத்தைப் பாராமல், உழைப்பைப் பாராமல், எப்படியாவது அவ ருடைய அன்பைப் பெறவேண்டுமென்று முயல்வது உலக இயல்பு. அப்படிச் சென்று திரிந்து பெறும் பொருள் சிறிது. - -

ஆளுல் அடியார்களேத் தொடர்ந்து பின்பற்றுவதல்ை பிறப்பை அறுக்கும் அரிய பேறு கிடைக்கும் என்ருல், என்னதான் செய்யக் கூடாது? ஒரு கண இன்பத்துக்காக மகளிர் பின்னே திரிவது காமுகர் இயல்பு. தாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/236&oldid=546391" இலிருந்து மீள்விக்கப்பட்டது