பக்கம்:எழில் உதயம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 23i

வேண்டுமோ, அப்படிப் பயன்படுத்தி நலம் பெற வேண்டும். அபிராமியை உள்ளத்தில் என்றும் மறவாமல் வைத்துத் தியானித்துத் துதிக்கும் செயலைச் செய்கிருர், அபிராமி பட்டர். அதுதான் இந்த மருந்தை நுகரும் Ꭷl] ☾Ꮱ &j . மருந்தை உண்ட பிறகு கவலை என்ன? இது மிகச் சிறந்த மருந்தாதலின் உடனே பலிக்கும். ஆகவே, ‘இனி என்ன கவலே?' என்ற பெருமிதத்தோடு இருக்கிருர் இந்த அன்பர். என்றும் மறவாமல் உள்ளத்தே நிறுத்தி, அந்தத் தியான நிலையினின்றும் பிறழாமல் நிற்கிருர்; இடை விடாமல் ஏத்துகிருர். இனி அவருக்கு ஏது குறை? சூரியன் எங்கே உதித்தால் என்ன? சந்திரனுக்கு வடகோடு உயர்ந் தால் என்ன? தென்கோடு உயர்ந்தால் என்ன? உலகத்தில் கவிபுருஷனுடைய ஆட்சி நடந்தால் என்ன? நடக்கா விட்டால் என்ன? யார் புகழ்ந்தால் என்ன? யார் இகழ்ந் தால் என்ன?

அணுக வேண்டியதை அணுகி அடைய வேண்டியதை அடைந்தவர் அவர். அவருடைய உள்ளம் நிறைவு பெற்று விட்டது. தனக்கு உவமை இல்லாத அன்னையின் தாள் சேர்ந்த அவருக்கு மனக் கவலை இல்லாமல் போய் விட்டது.

இந்த நிலையை அவர் அடைந்ததற்குக் காரணம் அடியாருடைய உறவு. -

பின்ன்ே திரிந்து உன் அடியாரைப் பேணிப்

பிறப்பறுக்க -

முன்னே தவங்கள் முயன்றுகொண் டேன்; முதல்

மூவருக்கும்

அன்னே, உலகுக்கு அபிராமி என்னும்

அருமருந்தே,

என்னே இனி? உன்னை யான்மற வாமல்கின்று

ஏத்துவனே. . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/239&oldid=546394" இலிருந்து மீள்விக்கப்பட்டது