பக்கம்:எழில் உதயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எழில் உதயம்

போதெல்லாம் அது பராசக்தியையே குறிக்கும். அவளே தயையின் பிழம்பு. அவளுடைய அருட்பெருக்கே அங்கங்கே ஆறு போலவும் கால்வாய் போலவும் ஒடுகிறது. இதை உணர்ந்தே அம்பிகையின் சகசிரநாமம் எடுத்தவுடன் அவளை, 'பூ'மாதா” என்று துதிக்கத் தொடங்குகின்றது. அந்தத் திருத்தாய் உலகுக்கெல்லாம் தாய். அவளிடமுள்ள அகடிதகடன சாமர்த்தியங்கள் பலவானுலும் எல்லாவற். றினும் சிறந்ததாக நிற்பதும் ஆத்மாக்களுக்குப் பயன் படுவதும் அருள். அந்த அருளின் நிலையம் தான் என்பதை அறிவுறுத்தவே அவள் பெண்மைக் கோலத்தில் தாயாக விளங்குகிருள். -

அவளுடைய பெருமைகள் பலவற்றையும் தெரிந்து கொண்டாலும் அவள் அருள் நிரம்பிய தாயாக நிற்கிருள் என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் ஒரு பயனும் இல்லை. அதனுல்தான் சகசிர நாமம் எல்லா நாமங்களுக்கும் முதலாக ரீமாதா என்பதை வைத்துப் போற்றுகிறது.

அது மாத்திரம் அன்று. ஆயிர நாமங்களையும் சொல்லப் புகுந்த ஒருவன் இடையிலே தடைப்பட்டு நிற்கிருன். சொன்ன அளவுக்கு அவனுக்குப் பயன் உண்டு. முதல் நாமத்தைச் சொன்னலே போதும்; எது உயிராக நிற்கிறதோ அதைத் தெரிந்து கொண்டவனகிருன். அதற்கு ஏற்ற வகையில் இருப்பது அந்தத் திருநாமம்.

இவற்றையெல்லாம் எண்ணிய அபிராமிபட்டர் அவளைத் துணையென்று சொல்லுவதோடு நிறைவு பெற வில்லை; உயர்ந்த துணை யென்பதைக் காட்ட, "தொழுந் தெய்வம்' என்ருர். அப்போதும் அவர் திருப்தி அடைய. வில்லை. அவ்யாஜமான கருணையுடையவள் அவள் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/40&oldid=546197" இலிருந்து மீள்விக்கப்பட்டது